சந்தானம் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் A1 அக்யுஸ்ட் நெம்பர் ஒன் இரண்டாவது டீசர் வெளியானது. படம் காதல், காமெடி கலந்த கலவையான படக்கதையாக டீசர் வெளியாகியுள்ளது. படத்தை ஜான்சன்.கே இயக்கியுள்ளார். இசை சாந்தோஸ் நாராயாணன், நாயகி தாரா, மொட்டை ராஜேந்திரன், மனோகர், சாமிநாதன், சாய்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தை எஸ். ராஜ் நாராயாணன் தயாரித்துள்ளார். படம் ஜீலை 26 தேதி வெளிவரவிருக்கிறது.
Month: July 2019
அஜித்தின் நேர்கொண்ட பார்வை
இரண்டாவது பாடல் வெளியாகியது. அஜித்குமார் நடிப்பில் விசுவாஸம் திரைப்படத்திற்கு பின்பு இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படம். நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் உருவான படத்தில் ஏற்கனவே ட்ரெய்லர் மற்றும் வானில் இருள் பாடல்வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.தற்போது இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.படம் ஆகஸ்ட்டு மாதம் வெளியாகவுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் 40 ஆண்டு கால கனவு நிறைவேறியது.
40 ஆண்டுகாலமாக ஆற்றை கடந்து செல்ல பாலம் இன்றி பரிதவித்து வந்த பள்ளி செல்லும் மாணவர்கள், விவசாயிகள் மற்றும் விளைபொருட்கள், மருத்துமனைக்கு செல்லும் நோயாளிகள் என்று நீண்ட கால கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டம் ஓகைப்பேரையூர் ஊராட்சியில் நாகராஜன் கோட்டகம் காளி மங்கலம் ஆகிய கிராமங்களை இணைக்க கூடிய வெள்ளை ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாமல் பள்ளி செல்லும் மாணவர்கள் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் விவசாயிகள் விளைவிக்கக்கூடிய பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்லவும் கடந்த 40 ஆண்டு காலமாக பெரும் துயரத்தை சந்தித்து வந்தனர். இதனிடையே அரசுக்கு பொதுமக்கள் பாலம் கட்ட வலியுறுத்தி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். மேலும் பல போராட்டங்களையும் நடத்தினர் காலம் இல்லாததால் பள்ளி மற்றும் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால்…
திருப்பூர் மாநகராட்சி சார்பில் நீர் மேலாண்மை கருத்தரங்கு.
திருப்பூர் மாநகராட்சி சார்பில் நீர் மேலாண்மை கருத்தரங்கு சமுத்ரா கிராண்ட் மகாலில் நடந்தது. திருப்பூர் மாநகர கமிஷனர் கே.சிவக்குமார் தலைமை தாங்கினார். ஸ்காட்லாந்து கே.சிவக்குமார், ஆணையர் சிவக்குமார் பங்கேற்பு. மழை நீர் சேகரிப்பு மையத்தை சேர்ந்த ஸ்காட்லாந்து கே.சிவக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மழைநீர் சேகரிப்பு, அதன் பயன்கள், மழை நீர் சேகரிக்க மேற்கொள்ள வேண்டிய நவீன வழிமுறைகள் குறித்து பேசினார். இந்த கருத்தரங்கில் திருப்பூர் சார்ந்த தொழில் அமைப்பினர், சமூக அமைப்பினர் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் தலைவர் ராஜா சண்முகம், ஏ. இ. பி.சி., சக்திவேல், கிளாசிக் சிவராமன், குமார் துரைசாமி, டையிங் சங்க முருகசாமி, மாநகராட்சி உதவி கமிஷனர்கள் சபியுல்லா, வாசுக்குமார், செல்வநாயகம், கண்ணன், மாநகராட்சி அலுவலர்கள் ரவி, ஆறுமுகம், சிக்கண்ணா கல்லூரி மோகன் குமார், எம்பரார் பொன்னுசாமி,…
இன்று நேற்று நாளை இரண்டாம் பாகம்.
விஷ்னு விசால் நடிப்பில் இன்று நேற்று நாளை படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்ததது. படத்தில் விஷ்னு விசால்,மியா ஜார்ஜ், கருணாகரன் ஜெயப்பிரகாஷ், பகவதிபொருமாள், போன்ற நட்சத்திரங்கள் நடித்திருந்தினர்.படத்தை இயக்குநர் ஆர்.ரவிக்குமார் இயக்கினார். நகைச்சுவை, மற்றும் விஞ்ஞானம் கலந்த கலவையான படமாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியாகி நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இரண்டாம் பாகம் பற்றி அறிவித்துள்ளனர் தயாரிப்பாளர்கள். கதை திரைக்கதை வசனத்தை ஆர்.ரவிக்குமார் எழுதியுள்ளார் அவருடன் பணியாற்றிய இணை இயக்குநர் எஸ்.பி.கார்த்திக் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதயமான இளைய சூரியன்,உதயநிதி!! சினிமா தயாரிப்பாளர், கதாநாயகன், கட்சி.
தி.மு.க. வில் இளைஞரணி செயலாளரானார் உதயநிதி ஸ்டாலின். தி.மு.க. கழக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்தார். சினிமா தயாரிப்பாளர், கதாநாயகனை, தொடர்ந்து தி.மு.க.கட்சியிலும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார். இவர் நாயகனாக நடித்த படங்களில் காமெடி,ஆக்ஷன் போன்ற கலவையான நடிப்பால் அவருக்கே உரிய நடிப்பு திறமையை வெளிக்காட்டியதன் மூலமாக மெல்ல,மெல்ல மக்களிடம் தான் சிறந்த நடிகன் என்று அறிமுகமானார். தற்போதுஅரசியல் பயணைத்தை தொடங்கியுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளி பிரச்சாரம் செய்தார். அவரது பேச்சு மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. அதையடுத்து தி.மு.க.வும் அமோக வெற்றி பெற்றது. உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியில் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததது. தி.மு.க.வில் இளைஞரணி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக செயல்பட்டு வந்தார். அதன்பின்பு ஒவ்வொரு…
விவசாயிகளுக்கு நிவாரணம் முதலமைச்சர் அறிவிப்பு.
அமெரிக்கன் படைப்புழுவின் தாக்கத்தால் பாதித்த மக்கச்சோளப் பயிர்களுக்கான நிவாரணத்தை விவசாயிகளுக்கு, சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதலமைச்சர். எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 3.5 லட்சம் ஹேக்டரில் மக்காச்சோளப் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றில் வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, இராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் அமெரிக்கன் படைப்புழு கர்நாடகம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களிலும்,மற்றும் தமிழ்நாட்டிலும் மக்காச்சோளப் பயிரைத் தாக்கியது. இப்புழுவின் தாக்குதல் பெருமளவு சேதத்தை ஏற்படுத்தியது. இப்படைப்புழுவின் தாக்குதல் பற்றி முதல்வரின் கவனத்திற்கு சென்றதும், பயிர் பாதிப்பினை கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள வேளாண்மை மற்றும் வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டு பாதிக்கப் பட்ட அனைத்து மாவட்டங்களிலும்…
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி பேட்டிங்
லண்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. டாஸை வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃபராஸ் அகமத் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
மக்களுக்கு தேவையான திட்டங்கள் இல்லாமல் முரண்பாடுகளின் தொகுப்பாக பட்ஜெட் அமைந்துள்ளது: டிடிவி.தினகரன்
சென்னை: மக்களுக்கு தேவையான திட்டங்கள் இல்லாமல் முரண்பாடுகளின் தொகுப்பாக பட்ஜெட் அமைந்துள்ளது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசின் புதிய இந்தியா குறித்து மக்களுக்கு அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
வேலை வாய்ப்பு
சென்னை உயர்நீதி மன்றத்தில் அலுவலக பணியிடங்களுக்கான பணி அறிவிப்பு. கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், தட்டச்சர், ஜெராக்ஸ் ஆப்ரேட்டர்,உதவியாளர் பணி போன்றவற்றிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள், கணினி பயிற்சி சான்றிதழ்,தட்டச்சு சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இந்த பணிகளுக்கான வயது வரம்பு 1-7-2019 தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. தகுதியும் விருப்பம் உள்ளவர்கள் இணைய தள மூலமாக விண்ணப்பிக்கலாம்.விண்ணபத்திற்கான காலம் இந்த மாதம் இறுதிக்குள் விண்ணப்பிக்க படவேண்டும்.மேலும் இந்த பணிகளுக்கான விவரங்களை தெரிந்து கொள்ள www.mhc.tn.gov.in இணையதள பக்கத்தில் பார்க்கவும்.