வேலை வாய்ப்பு

சென்னை உயர்நீதி மன்றத்தில்  அலுவலக பணியிடங்களுக்கான பணி அறிவிப்பு. கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், தட்டச்சர், ஜெராக்ஸ் ஆப்ரேட்டர்,உதவியாளர் பணி போன்றவற்றிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள், கணினி பயிற்சி சான்றிதழ்,தட்டச்சு சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இந்த பணிகளுக்கான வயது வரம்பு 1-7-2019 தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.   தகுதியும் விருப்பம் உள்ளவர்கள் இணைய தள மூலமாக விண்ணப்பிக்கலாம்.விண்ணபத்திற்கான காலம் இந்த மாதம் இறுதிக்குள் விண்ணப்பிக்க படவேண்டும்.மேலும் இந்த பணிகளுக்கான விவரங்களை தெரிந்து கொள்ள www.mhc.tn.gov.in இணையதள பக்கத்தில் பார்க்கவும்.

அரைஇறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய அணி – வங்காளதேசத்துடன் இன்று மோதல்

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் பர்மிங்காமில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது. இந்திய அணி 7 ஆட்டத்தில் ஆடி 5 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 11 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. இந்த போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காமல் இருந்த இந்திய அணி இதே ஆடுகளத்தில் (பர்மிங்காம்) நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் வீழ்ந்து முதல் தோல்வி கண்டது. அந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா சதம் அடித்தார். விராட்கோலி அரை சதத்தை கடந்தார். இருவரும் நல்ல பார்மில் நீடிக்கின்றனர். லோகேஷ் ராகுல் ஏமாற்றம் அளித்தார். டோனி, கேதர் ஜாதவ் அதிரடியாக ஆட முடியாமல் அதிர்ச்சி அளித்தனர். சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர…

சூடானில் பரபரப்பு; ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம்; துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலி

சூடானில் 30 ஆண்டுகளாக அதிபராக இருந்த ஒமர் அல் பஷீருக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் அவரை கைது செய்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. 3 ஆண்டுகளுக்குள் ஜனநாயக முறையில் புதிய ஆட்சி பொறுப்பேற்பதற்கு வழிவகை செய்யப்படும் என ராணுவம் அறிவித்தது. ஆனால் மக்களாட்சிக்கு ஆதரவாக போராட்டங்கள் தொடர்ந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி ராணுவத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் சமாதானத்தை வலியுறுத்திய ராணுவம் பின்னர் போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க தொடங்கியது. கடந்த மாதம் 3–ந்தேதி தலைநகர் கார்டூமில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 100–க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த நிலையில், நாட்டில் உடனடியாக மக்களாட்சியை கொண்டு வர வலியுறுத்தி கார்டூம் மற்றும் ஒம்டார்மன் நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களை…

மும்பையில் கனமழை: 54 விமானங்கள் திருப்பி விடப்பட்டன

மும்பையில் கடந்த 4 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மும்பை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. கனமழை இன்னும் 3 தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதை மூடப்பட்டது. 54 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. மும்பை வரவிருந்த 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விஸ்தாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.