உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி பேட்டிங்

லண்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. டாஸை வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃபராஸ் அகமத் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 

மக்களுக்கு தேவையான திட்டங்கள் இல்லாமல் முரண்பாடுகளின் தொகுப்பாக பட்ஜெட் அமைந்துள்ளது: டிடிவி.தினகரன்

சென்னை: மக்களுக்கு தேவையான திட்டங்கள் இல்லாமல் முரண்பாடுகளின் தொகுப்பாக பட்ஜெட் அமைந்துள்ளது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசின் புதிய இந்தியா குறித்து மக்களுக்கு அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.