அஜித்தின் நேர்கொண்ட பார்வை

இரண்டாவது  பாடல் வெளியாகியது.    அஜித்குமார் நடிப்பில் விசுவாஸம்  திரைப்படத்திற்கு பின்பு இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படம். நடிகை ஸ்ரீதேவியின்  கணவர் போனிகபூர் தயாரிப்பில் உருவான படத்தில் ஏற்கனவே ட்ரெய்லர் மற்றும் வானில் இருள் பாடல்வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.தற்போது இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.படம் ஆகஸ்ட்டு மாதம் வெளியாகவுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் 40 ஆண்டு கால கனவு நிறைவேறியது.

40 ஆண்டுகாலமாக ஆற்றை கடந்து செல்ல பாலம் இன்றி பரிதவித்து வந்த பள்ளி செல்லும் மாணவர்கள், விவசாயிகள் மற்றும் விளைபொருட்கள், மருத்துமனைக்கு செல்லும் நோயாளிகள் என்று நீண்ட கால கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டம் ஓகைப்பேரையூர் ஊராட்சியில் நாகராஜன் கோட்டகம் காளி மங்கலம் ஆகிய கிராமங்களை இணைக்க கூடிய வெள்ளை ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாமல் பள்ளி செல்லும் மாணவர்கள் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் விவசாயிகள் விளைவிக்கக்கூடிய பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்லவும் கடந்த 40 ஆண்டு காலமாக பெரும் துயரத்தை சந்தித்து வந்தனர். இதனிடையே அரசுக்கு பொதுமக்கள் பாலம் கட்ட வலியுறுத்தி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். மேலும் பல போராட்டங்களையும் நடத்தினர் காலம் இல்லாததால் பள்ளி மற்றும் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால்…

திருப்பூர் மாநகராட்சி சார்பில் நீர் மேலாண்மை கருத்தரங்கு.

திருப்பூர் மாநகராட்சி சார்பில் நீர் மேலாண்மை கருத்தரங்கு சமுத்ரா கிராண்ட் மகாலில் நடந்தது. திருப்பூர் மாநகர கமிஷனர் கே.சிவக்குமார் தலைமை தாங்கினார். ஸ்காட்லாந்து கே.சிவக்குமார், ஆணையர் சிவக்குமார் பங்கேற்பு. மழை நீர் சேகரிப்பு மையத்தை சேர்ந்த ஸ்காட்லாந்து கே.சிவக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மழைநீர் சேகரிப்பு, அதன் பயன்கள், மழை நீர் சேகரிக்க மேற்கொள்ள வேண்டிய நவீன வழிமுறைகள் குறித்து பேசினார். இந்த கருத்தரங்கில் திருப்பூர் சார்ந்த தொழில் அமைப்பினர், சமூக அமைப்பினர் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் தலைவர் ராஜா சண்முகம், ஏ. இ. பி.சி., சக்திவேல், கிளாசிக் சிவராமன், குமார் துரைசாமி, டையிங் சங்க முருகசாமி, மாநகராட்சி உதவி கமிஷனர்கள் சபியுல்லா, வாசுக்குமார், செல்வநாயகம், கண்ணன், மாநகராட்சி அலுவலர்கள் ரவி, ஆறுமுகம், சிக்கண்ணா கல்லூரி மோகன் குமார், எம்பரார் பொன்னுசாமி,…