திருவாரூர் மாவட்டத்தில் 40 ஆண்டு கால கனவு நிறைவேறியது.

40 ஆண்டுகாலமாக ஆற்றை கடந்து செல்ல பாலம் இன்றி பரிதவித்து வந்த பள்ளி
செல்லும் மாணவர்கள், விவசாயிகள் மற்றும் விளைபொருட்கள்,
மருத்துமனைக்கு செல்லும் நோயாளிகள் என்று நீண்ட கால கோரிக்கை
ஏற்றுக்கொள்ளப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டம் ஓகைப்பேரையூர் ஊராட்சியில்
நாகராஜன் கோட்டகம் காளி மங்கலம் ஆகிய கிராமங்களை இணைக்க கூடிய
வெள்ளை ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாமல் பள்ளி செல்லும் மாணவர்கள்
மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் விவசாயிகள்
விளைவிக்கக்கூடிய பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்லவும் கடந்த 40 ஆண்டு
காலமாக பெரும் துயரத்தை சந்தித்து வந்தனர்.
இதனிடையே அரசுக்கு பொதுமக்கள் பாலம் கட்ட வலியுறுத்தி பல ஆண்டுகளாக
கோரிக்கை வைத்தனர். மேலும் பல போராட்டங்களையும் நடத்தினர் காலம்
இல்லாததால் பள்ளி மற்றும் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள்
மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் சுற்றி
செல்லக்கூடிய ஒரு அவல நிலை இருந்ததது.
தற்போது அப்பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு .எஸ். ஆர்.
ஜீவானந்தம் அவர்களின் விடாமுயற்சியால் மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர்
R.காமராஜ் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தற்போது உடனடியாக
உணவுத்துறை அமைச்சர் அவர்கள் உத்தரவின்பேரில் 1.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு
வெள்ளை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
இதனால் அப்பகுதி வாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

திருவாரூர் மாவட்ட செய்தியாளர் k. அம்பிகாபதி

Related posts

Leave a Comment