இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பாக கோவை மாநகராட்சி கெம்பட்டி காலனி பகுதியில் இருக்கும் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் சுவச் பாரத் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாநில குழு உறுப்பினர் முனைவர் எஸ். செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி கல்வி அதிகாரி மற்றும் கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணையர் மகேஷ் குமார் பள்ளி தலைமையாசிரியர். வெள்ளிங்கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியை திருமதி. கிருஷ்ணவேணி அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் எச் பி சி எல் பொது மேலாளர் தாமோதரன் அவர்கள் பங்கேற்று தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பேச்சுப்போட்டி கட்டுரைப் போட்டி ஓவியப்போட்டி ஆகியவற்றில் பங்கேற்று தங்கள் திறனை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தினார். மேலும் பள்ளிக்கு கொசு…
Month: August 2019
பத்திரிக்கை துறையில் அர்பணிப்பு, சாதனையை பாராட்டி டாக்டர் பட்டம்.
வாரஇதழ், பருவஇதழ், மாத இதழ் என கடந்த பதினான்கு ஆண்டுகளாக பத்திரிக்கையில் செய்த சாதனைகளை பாராட்டி. 10.8.2019 அன்று சர்வதேச அமைதி பல்கலை கழகம் ஜெர்மனி சார்பாக மக்கள் மித்திரன் மாத இதழ் ஆசிரியர். D.மணியன் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இவரது பணிசிறக்க மக்கள் மித்திரன் குழுமம் சார்பாக பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். V.தமிழ்வேந்தன்.Ma(soc) Ma jmc G.செந்தில்குமார்.Bsc.LLB K.குருசந்திரன்.Bsc D.மகேஸ்வரன். B.கௌதம்.m.sc KV.ஶ்ரீதரன்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததால் அவர் இன்று காலமானார். அவரின் மறைவுக்கு பாராத பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பல்லடம் அருகே பனியன் தொழிலாளர்களுக்கு வாந்தி மயக்கம்
பல்லடம் சின்னக்கரை அருகே சேகாம்பாளையத்தில் லீ சார்க் பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கி பனிபுரிந்து வரும். பெண்தொழிளார்கள் நேற்று கேண்டீனில் உணவு உட்கொண்ட பின்னர். ஒரு சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து 50 க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் வரவே பல்லடம் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பல்லடம் போலீசார் தீவிர விசாரணை. திருப்பூர் மாவட்ட த்தில் லட்சக்கணக்கான தொழிளார்கள் வேலை செய்து வருகின்றனர். அவ்வாறு வேலை பார்க்கும். நிறுவனங்களில் உள்ள கேன்டீன்களில் டீ, திண்பண்டங்கள், உணவு பொருட்கள் தரத்தை ஆய்வு செய்வதில் மெத்தனம் காட்டுகிறதா? திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை? இனி வரும் காலங்களில் பனியன் தொழிலாளர்களின் உணவு பொருட்களின் தரத்தை ஆய்வு செய்யுமா உணவு பாதுகாப்புத்துறை.
மதுரையில் மக்களிடம் மனுக்களை பெற்றார். அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.
முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை துவக்கி வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். மதுரை மாவட்டத்தில் இன்று உசிலம்பட்டி, திருமங்கலம், பேரையூர், கள்ளிக்குடி, வாடிப்பட்டி, ஆகிய இடங்களில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை துவக்கி மக்களிடத்திலிருந்து மனுக்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெற்றார்
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
சென்னை கோயம்பேடு தே.மு.தி.க வின் தலைமைக் கழகத்தில் விஜயகாந்தின் பிறந்த நாள் தினத்தையொட்டி வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடித்து வருடவருடம் நலத்திட்ட உதவிகளை முதியவர்களுக்கு, குழந்தைகளுக்கு, ஊனமுற்றோர்களுக்கு வழங்கி வருவதாகவும் தே.மு.தி.க வின் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இன்றைய விழாவில் குழந்தைகள் விஜயகாந்திற்கு இனிப்புகளை வழங்கினார்கள், அவரும் குழந்தைகளுக்கு இனிப்பை வழங்கினார். இதே போல் தன்னுடைய பிறந்த நாளில் கழக நிர்வாகிகளும், கழகத்தொண்டர்களும் பல நலத்திட்டங்களை செய்யவேண்டுமன கேட்டு கொள்கிறேன். என தே.மு.தி.க. தலைவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் 39 வது படத்தை இயக்கும் சிவா
நடிகர் சூர்யாவுடன் அவரது 39 படத்தை இயக்குகிறார் சிவா. அவரின் பிறந்த நாளில் வெளியாகி டிரென்டிங்கனாது. சிவா அவருடைய டீமின் ஆக்சன், குடும்பம், காதல் கலந்த கலவையான பல வெற்றி படங்களை தந்துள்ளார். ஸ்டுடியோ கீரின் தயாரிப்பில் சூர்யா, இயக்குநர் சிவா, இசை டி.இமான், ஒளிப்பதிவு வெற்றி, படத்தொகுப்பு ரூபன் கலை மிலன், போன்றவர்கள் இணைந்து பணியாற்றபோவதாக அறிவித்துள்ளனர்.
நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
சிவகாரத்திக்கேயன் நடித்து வரும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். பாண்டிராஜ் உடன் மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா வை, தொடர்ந்து. இவர்களின் கூட்டணியில் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. படத்தின் போஸ்டரில் கிராமத்து பின்னனியை கொண்ட. ஆக்சன் கலந்த சிவகார்த்திகேயனின் தோற்றம் ரசிகர்களை மகிழ்ச்சியடை செய்துள்ளது. நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுடன் அனுஇம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சூரி,யோகிபாபு, மற்றும் பலரும் படத்திற்கு இசை டி.இமான், மேலும் படத்தின் பார்ஸட் லுக் போஸ்டரில் செப்டம்பரில் கொண்டாட்டம் குறிப்பிடபட்டுள்ளது.
குற்றால அருவியில் வெள்ளபெருக்கு.
மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் குற்றால ஐந்தருவியில் ஆர்பாரித்துகொட்டும் வெள்ளம். குற்றாலம் மெயின் அருவி, மற்றும் ஐந்தருவியில் சுற்றுலாவுக்கு வருபவர்கள். அருவியில் குளித்து செல்வார்கள். ஆனால் தற்போது கனமழை காரணமாக வெள்ளம் ஆர்பரித்துக்கொட்டுவதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது
மதுரை பெரியார் பேருந்து நிலைய பணிகள். விரைந்து முடிக்க அதிகாரிகள் ஆலோசனை.
மதுரை பெரியார் பேருந்து நிலையம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நவீனமாக மாற்றப்பட உள்ள பணிகள் தீவிரம். விரைந்து முடிக்க அதிகாரிகள் ஆலோசனை. மதுரை பெரியார் பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இதற்கான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 159.7 கோடி ரூபாயை மதுரை மாநகராட்சி நிதி ஒதுக்கியது. இதற்கான தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களால் கடந்த ஆறு மாதம் முன்பே அடிக்கல் நாட்டப்பட்டது. பணிக்காக காம்ப்ளக்ஸ்களும், பஸ் ஸ்டாண்டும் இடிக்கப்பட்டு ஒப்பந்தக்காரர்கள் P&C. புரொடக்க்ஷன்ஸ் சார்பில் புதிய பேருந்து நிறுத்தம் பணி துவங்கி நடைபெற்று வரும் நிலையில் 7 தளங்கள் அமைக்கும் பணியினை மாநகராட்சி பொறியாளர் சேகர், உதவிப் பொறியாளர் சேவியர், தியாகு ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். தற்போது இரு தரை கீழ் தளங்கள் அமைப்பதற்கான ராட்ச்சச பள்ளம் தோண்டும்…