குற்றால அருவியில் வெள்ளபெருக்கு.

மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில்  பெய்துவரும் கனமழையால் குற்றால ஐந்தருவியில் ஆர்பாரித்துகொட்டும் வெள்ளம்.  குற்றாலம் மெயின் அருவி, மற்றும் ஐந்தருவியில் சுற்றுலாவுக்கு வருபவர்கள். அருவியில் குளித்து செல்வார்கள். ஆனால் தற்போது கனமழை காரணமாக வெள்ளம் ஆர்பரித்துக்கொட்டுவதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது

மதுரை பெரியார் பேருந்து நிலைய பணிகள். விரைந்து முடிக்க அதிகாரிகள் ஆலோசனை.

மதுரை பெரியார் பேருந்து நிலையம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நவீனமாக மாற்றப்பட உள்ள பணிகள் தீவிரம். விரைந்து முடிக்க அதிகாரிகள் ஆலோசனை. மதுரை பெரியார் பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இதற்கான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 159.7 கோடி ரூபாயை மதுரை மாநகராட்சி நிதி ஒதுக்கியது. இதற்கான தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களால் கடந்த ஆறு மாதம் முன்பே அடிக்கல் நாட்டப்பட்டது. பணிக்காக காம்ப்ளக்ஸ்களும், பஸ் ஸ்டாண்டும் இடிக்கப்பட்டு ஒப்பந்தக்காரர்கள் P&C. புரொடக்க்ஷன்ஸ் சார்பில் புதிய பேருந்து நிறுத்தம் பணி துவங்கி நடைபெற்று வரும் நிலையில் 7 தளங்கள் அமைக்கும் பணியினை மாநகராட்சி பொறியாளர் சேகர், உதவிப் பொறியாளர் சேவியர், தியாகு ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். தற்போது இரு தரை கீழ் தளங்கள் அமைப்பதற்கான ராட்ச்சச பள்ளம் தோண்டும்…

முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவின், அரசியல் பயணம்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட மத்திய வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் சுஷ்மா ‎ஆகஸ்ட் 6-ந்தேதி இரவு காலமானார். வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கிய அவரின் அரசியல் பயணம்.  வெளியுறவுத்துறை மந்திரியாகவும் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர். இந்தியாவின்  பதினைந்தாவது மக்களவையின் எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார். இவர் டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக ஏழு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லியின் ஐந்தாவது முதலமைச்சராக பதவி ஏற்றார்.  மேலும் அவர் டெல்லியின் முதல் பெண் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்திரா காந்திக்குப் பிறகு வெளியுறவுத்துறை மந்திரி பதவி வகித்த இரண்டாவது பெண் சுஷ்மா சுவராஜ் ஆவார்.  2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான இந்திய-இஸ்ரேல் நாடாளுமன்ற நட்புக் குழுவின் தலைவராக செயல்பட்டார்.  2009 ஆம் ஆண்டு…