மதுரை பெரியார் பேருந்து நிலைய பணிகள். விரைந்து முடிக்க அதிகாரிகள் ஆலோசனை.

மதுரை பெரியார் பேருந்து நிலையம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நவீனமாக மாற்றப்பட உள்ள பணிகள் தீவிரம். விரைந்து முடிக்க அதிகாரிகள் ஆலோசனை.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இதற்கான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 159.7 கோடி ரூபாயை மதுரை மாநகராட்சி நிதி ஒதுக்கியது.

இதற்கான தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களால் கடந்த ஆறு மாதம் முன்பே அடிக்கல் நாட்டப்பட்டது. பணிக்காக காம்ப்ளக்ஸ்களும், பஸ் ஸ்டாண்டும் இடிக்கப்பட்டு ஒப்பந்தக்காரர்கள் P&C. புரொடக்க்ஷன்ஸ் சார்பில் புதிய பேருந்து நிறுத்தம் பணி துவங்கி நடைபெற்று வரும் நிலையில் 7 தளங்கள் அமைக்கும் பணியினை மாநகராட்சி பொறியாளர் சேகர், உதவிப் பொறியாளர் சேவியர், தியாகு ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

தற்போது இரு தரை கீழ் தளங்கள் அமைப்பதற்கான ராட்ச்சச பள்ளம் தோண்டும் பணி நடைபெறுகிறது.

மதுரை மற்றும் சுற்றுப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை வரும் 2020 ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை நகரத்திற்குள் அதிக வாகனங்கள் வந்து செல்வதால் ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் பணிசெய்து வருவதில் சிரமம் இருப்பதாகவும் வரும் பேருந்துகளை மதுரைக் கல்லூரியிலிருந்து (கிரவுண்ட்) பழங்காநத்தம் வழியாக இயக்கினால் பணி விரைந்து முடிக்க ஏதுவாக இருக்கும் என பொதுமக்கள் போக்குவரத்து காவல் துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் காலையில் மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே 8 மணி முதல் 10 மணி வரை ஆபிசுக்கு செல்லும் ஊழியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் ட்ராபிக் அமைவதால் போக்குவரத்துக்கு இடையூறாக மக்கள் சிரமத்துக்கு உள்ளாவார்கள்.

போக்குவரத்து காவல் அதிகாரிகள் தினமும் காலை வந்து சரி செய்தால் மட்டுமே மக்கள் சிரமமின்றி செல்ல முடியும் விரைவில் இந்த பணி செய்தால் மட்டுமே மக்களுக்கு நன்மை பயக்கும்.                                                                                                    

Related posts

Leave a Comment