முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததால் அவர் இன்று காலமானார்.  அவரின் மறைவுக்கு பாராத பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பல்லடம் அருகே பனியன் தொழிலாளர்களுக்கு வாந்தி மயக்கம்

பல்லடம்  சின்னக்கரை அருகே சேகாம்பாளையத்தில் லீ சார்க் பனியன்  நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கி பனிபுரிந்து வரும். பெண்தொழிளார்கள் நேற்று   கேண்டீனில்  உணவு உட்கொண்ட பின்னர். ஒரு சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து 50 க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் வரவே பல்லடம் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பல்லடம் போலீசார் தீவிர விசாரணை.   திருப்பூர் மாவட்ட த்தில் லட்சக்கணக்கான தொழிளார்கள் வேலை செய்து வருகின்றனர். அவ்வாறு வேலை பார்க்கும். நிறுவனங்களில் உள்ள கேன்டீன்களில்  டீ, திண்பண்டங்கள், உணவு பொருட்கள் தரத்தை  ஆய்வு செய்வதில் மெத்தனம் காட்டுகிறதா? திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை? இனி  வரும் காலங்களில் பனியன் தொழிலாளர்களின் உணவு பொருட்களின் தரத்தை ஆய்வு செய்யுமா உணவு பாதுகாப்புத்துறை.

மதுரையில் மக்களிடம் மனுக்களை பெற்றார். அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை துவக்கி வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். மதுரை மாவட்டத்தில்  இன்று உசிலம்பட்டி, திருமங்கலம், பேரையூர், கள்ளிக்குடி, வாடிப்பட்டி, ஆகிய இடங்களில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை துவக்கி மக்களிடத்திலிருந்து மனுக்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெற்றார்

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

சென்னை கோயம்பேடு தே.மு.தி.க வின் தலைமைக் கழகத்தில் விஜயகாந்தின் பிறந்த நாள்  தினத்தையொட்டி வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடித்து வருடவருடம் நலத்திட்ட உதவிகளை  முதியவர்களுக்கு, குழந்தைகளுக்கு, ஊனமுற்றோர்களுக்கு வழங்கி வருவதாகவும் தே.மு.தி.க வின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.  இன்றைய விழாவில் குழந்தைகள் விஜயகாந்திற்கு இனிப்புகளை வழங்கினார்கள், அவரும் குழந்தைகளுக்கு இனிப்பை வழங்கினார். இதே போல் தன்னுடைய பிறந்த நாளில் கழக நிர்வாகிகளும், கழகத்தொண்டர்களும்  பல நலத்திட்டங்களை செய்யவேண்டுமன கேட்டு கொள்கிறேன். என  தே.மு.தி.க. தலைவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.