குண்டடம் வட்டாரம் மானூர்பாளைம் கிராமத்தில் பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் வழங்கினார். தாராபுரம் தாலுக்கா, குண்டடம் வட்டாரத்தில் சடையபாளைம் ஊராட்சியில் உள்ள மானூர்பாளையம் கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலரின் முன்னிலையில் 26.9.2019 இன்று வியாழக்கிழமை மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் முன்னால் சடையபாளைம் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி அவர்களும், மற்றும் தாராபுரம் வட்டாட்சியர் ரவிச்சந்திரன், குண்டடம் வருவாய் உள்வட்ட ஆய்வாளர் தீனதயாளான், மானூர்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ரம்யா, ஏரகாம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் முத்துசாமி போன்ற அதிகாரிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர். குண்டடம் வட்டார வேளாண்மைத்துறை, சமூக நலத்துறை, பொது சுகாதாரத்துறை தாயம்பாளையம், கால்நடை பராமரிப்புத்துறை தாராபுரம் சரகம், ஒருகிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் என துறை வாரியாக கண்காட்சி சிறு…
Month: September 2019
திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். விஜயகார்த்திகேயன்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியராக விஜயகார்த்திகேயன் அவர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழகம் முழுவதும் தமிழக அரசால் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணிமாறுதல் செய்யப்பட்டனர். இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிவந்த கே.எஸ். பழனிசாமி அவர்கள் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சியராக விஜயகார்த்திகேயன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பெற்ற விஜயகார்த்திகேயன் திருப்பூர் மாவட்ட பொதுமக்களின் தங்களது குறைகளை களைய என்நேரமும் என்னை அனுகலாம் என்று புதிதாக பொறுப்பேற்ற திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கூறியுள்ளார். அவரது பணி சிறக்க மக்கள்மித்திரன் பத்திரிக்கை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.