திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த ஜிலேபி நாயக்கன் பாளையத்தில் முறைகேடாக மதுபாட்டில்களை எடுத்து வந்து. ரசாயன பொருட்களை பயன்படுத்தி அதன் கழிவுகளை பூமிக்கடியில் விடுவதால் அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள் பாழாகி வருவதாக விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.
மேலும், கம்பெனியில் எங்கிருந்து மது பாட்டில்கள் எடுத்து வரப்படுகிறது என்பது தெரியவில்லை. தவிர, சுத்தம் செய்யப்படாமல் மதுபாட்டில்களை எடுத்துவந்து எந்த உரிமமும் இல்லாமலும் நிறுவனத்தின் பெயர் பலகை இல்லாமலும் பெண்கள் பலரை பணியில் அமர்த்தி மதுபாட்டில்களை சுத்தம் செய்து கழிவுகளை பூமிக்கடியில் விடுவதால் விளைநிலங்கள் சேதம் அடைவதோடு மட்டுமில்லாமல் முகம் சுளிக்க கூடிய அளவில் துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்துள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு விளை நிலங்கள் பாழாகும் அபாயத்தை தடுக்கும் வகையில, மாவட்ட நிர்வாகம், மது பாட்டில்களை கழுவும் கம்பெனி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவிர மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அவ்விடத்திற்குச் சென்று உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விவசாயப் பெருங்குடி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை அருகே காலி மதுபாட்டில் குடோனால் விவசாயிகள் வேதனை

usefull information