காவல்துறை உங்கள் நண்பன் உதவிகரம் காட்டிய டி.எஸ்.பி

பெருந்துறை துணைக் காவல் கண்காணிப்பாளராக  ராஜ்குமார்.
அவர் கொடுமுடி காவல் நிலைய ஆய்வுக்காக நேற்று 29.11.2019 வெள்ளிக்கிழமையன்று  சென்றுவிட்டு திரும்பி வரும் போது வழியில் வாகன விபத்தில் அடிபட்ட கொடுமுடியைச் சேர்ந்த  இரத்தக் காயங்களுடன் நடக்க முடியாத நிலையில் இருந்த பெண்ணின் உதவிக்காக  அவருடைய  காவல்வாகனத்தில் ஏற்றும்பொழுது
அவ்வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் வந்துள்ளது.   உடனடியாக  108  அவசர உதவி வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
 பின்னர் நெடுஞ்சாலைத்துறைக்கு தகவல் தெரிவித்து வேகத்தடை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார்.காவல்துறை உங்களின் நண்பன்தான் என்பதை அவரது இந்த  செயல் மூலம் மெய்பித்து காட்டியுள்ளார்.
 மேலும் பொதுமக்களின் ஏகபோக  பாராட்டையும் பெற்றுள்ளார்.

Related posts

Leave a Comment