உடுமலையில் சாலைபாதுகாப்பு பேரணி

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பொதுமக்களுக்கு சாலைபாதுகாப்பை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி காவல்துறையினர் அசத்தல்.

தமிழகம் முழுவதும் ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வாகனங்களில் ஹெல்மட், சீட்பெல்ட்  அணிந்து பாதுகாப்பாக விபத்தில்ல பயணம் செய்திட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலைபாதுகாப்பு வார விழா நடைபெற்று வருகிறது.

சாலையில் பாதுகாப்பான பயணத்தைபற்றி விளக்கும் விதமாக   உடுமலையில் 21.01.2020 நேற்று 31-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் 21.01.2020 அன்று சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை  துவக்கி வைத்தார்.

இதில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுப்புராமன், போக்குவரத்து எஸ்.ஐ., போக்குவரத்து காவலர்கள், மோட்டார்வாகன ஆய்வாளர் செல்வதீபா  சட்டம் ஒழுங்கு எஸ்.ஐ. ஆனந்தகிருஷ்ணன்,காவலர்கள் மற்றும் மாணவ,மாணவிகள், தன்னார்வலர்கள், ஓட்டுனர்களும் கலந்துகொண்டு சாலைபாதுகாப்பு பேரணியை சிறப்பித்தனர். 

உடுமலை காவல்துறையின் இந்த விழிப்புணர்வுபேரணி வெருமெனவாக  இல்லாமல் பொதுமக்கள் மனதில் சென்று சேருமளவுக்கு இருந்ததாக உடுமலை காவல்துறையை பற்றி பலரும் பாராட்டு தெரிவித்தார்கள்.

Related posts

Leave a Comment