பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் காவல்துறை மரியாதையுடன் இன்று அடக்கம் ..

சென்னையில் நேற்று காலமான பாடகர் எஸ்.பி.பி.யின் உடல், அவரது பண்ணைத் தோட்டத்தில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி., அதில் இருந்து மீண்ட நிலையில், திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமானார். அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். எஸ்.பி.பி. உடல் இறுதிச் சடங்கிற்காக, திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்திற்கு இன்று எடுத்துச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது. ரசிகர்கள் அஞ்சலி செலுத்த திரண்டதால் கொரோனா தொற்று அபாயம் உள்ளதாகக் கருதி நேற்று மாலையே அவரது உடல் தாமரைப்பாக்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்குள்ள பண்ணை வீட்டில் இன்று உடல் அடக்கம் நடைபெறுகிறது. தாமரைப் பாக்கத்தில் அஞ்சலி செலுத்த மக்களுக்கு அனுமதி இல்லை என்றும், 500 போலீசார்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று இரவில் சென்னை, தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.இந்நிலையில், விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல்கள் தேமுதிக கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆனால், விஜயகாந்திற்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தற்போது விஜயகாந்தின் உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளது.6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக, விஜயகாந்த் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம், பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு சென்ற போது அவருக்கு லேசாக தென்பட்ட கொரோனா அறிகுறி, சரி செய்யப்பட்டு விட்டதாகவும். தேமுதிக தலைவர் .விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார். என தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

விஜய் நடித்துள்ள “மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும்”

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும் மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் “திரை அரங்குகளை திறந்த பின்னர் மாஸ்டர் படம் ரிலீஸாகும்” “மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டி. தளங்களில் வெளியாக வாய்ப்பு இல்லை

தேவகோட்டை பள்ளியில் சத்துணவு மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல் வட்டார வளர்ச்சி அலுவலர் வழங்கினார்.

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கினார்.கொரோனா தொற்று பரவலால் சில மாதங்களாக பள்ளிகள் திறக்காத நிலையில், கடந்த ஜூன்,ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு உணவுப் பொருள்களை பள்ளிகளின் மூலம் நேரடியாக வினியோகிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு, அரிசி ஆறரை கிலோ, இரண்டு கிலோ 600 கிராம் பருப்பு , உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரிசி ஒன்பது கிலோ 750 கிராம்; பருப்பு மூன்று கிலோ 640 கிராம் நேரடியாக சத்துணவு மையங்களில் வினியோகிக்க உத்தரவிடப்பட்டது.இதையடுத்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு உலர்…

உடுமலையில் பட்டப்பகலில் பயங்கரம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் உதவியாளரை காரில் கடத்தி சென்ற மர்ம நபர்கள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பட்டப்பகலில் பயங்கரம் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உதவியாளர் கர்ணன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதை அடுத்து பொள்ளாச்சி உடுமலை மற்றும் அனைத்து சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்