தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று இரவில் சென்னை, தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல்கள் தேமுதிக கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், விஜயகாந்திற்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தற்போது விஜயகாந்தின் உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக, விஜயகாந்த் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம், பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு சென்ற போது அவருக்கு லேசாக தென்பட்ட கொரோனா அறிகுறி, சரி செய்யப்பட்டு விட்டதாகவும். தேமுதிக தலைவர் .விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார். என தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

Related posts

Leave a Comment