2015 ஆம் ஆண்டில் சிறந்த நிருபருக்கான அன்னை தெரசா விருது

2015 ஆம் ஆண்டில் சிறந்த நிருபருக்கான அன்னை தெரசா விருது 2015 ஆம் ஆண்டில் உள்ளாட்சி முரசு பத்திரிக்கை சார்பாக சிறந்த நிருபருக்கான அன்னை தெரசா விருது உடுமலை D.மணியன் அவர்களுக்கு கோவை ஜென்னி கிளப்பில் உள்ளாட்சி முரசு ஆசிரியர் ரிச்சார்டு ஆனந்த் அவர்கள் கவுண்டன்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ.ஆறுக்குட்டி அவர்களால் மக்கள் மித்திரன் ஆசிரியர் D.மணியன் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

திருநெல்வேலி காவல்துறையினர்.உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புத்துணர்வு அளிக்கும் வகையில், யோகா பயிற்சி மேற்கொண்டனர்

திருநெல்வேலி காவல்துறையினர்.உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புத்துணர்வு அளிக்கும் வகையில், யோகா பயிற்சி மேற்கொண்டனர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி மாவட்டத்தில் பணியாற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் மன வலிமை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புத்துணர்வு அளிக்கும் வகையில் யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இன்று(24.11.2020) ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சிசில் அவர்கள் தலைமையில் ஆயுதப்படை ஆய்வாளர் திருமதி மகேஸ்வரி அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆயுதப்படை காவல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் சிறந்த யோகா பயிற்சியாளரை கொண்டு தியான பயிற்சி, மூச்சு பயிற்சி,ஆசனப் பயிற்சி வழங்கப்பட்டது.யோகா பயிற்சியானது சமூக இடைவெளியுடன் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

பழனியில் மோட்டார் தயாரிப்பு நிறுவனங்களின் லோகோக்களை பார்த்தவுடன் நிறுவனங்களின் பெயரை சரளமாக சொல்லும் மூன்றுவயது சிறுவன்

பழனி சண்முகபுரம் பகுதியில் வசித்து வருபவர் மணியாதவ் ஆர்த்தி தம்பதி. இவர்களுக்கு மூன்று வயதில் சர்னித்அபினவ் என்ற மகன் உள்ளான். சிறுவன் சர்னித் அபினவ் மோட்டார் தயாரிப்பு நிறுவனங்களின் லோகோக்களை கண்ணில் பார்த்தவுடன் அந்த நிறுவனங்களின் பெயரை  சரளமாக தாமதமின்றி சொல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. சிறுவனின் இந்த சாதனையை பாராட்டி இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு  மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்டு ஆகிய சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மழலையர் பள்ளியில் ப்ரீகேஜி படித்துவரும் சிறுவன் சர்னித் அபிநவ் A FOR APPLE என்பதைக்கூட A FOR AUDI என்று கார்களின் பெயரிலேயே உச்சரிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பழனி சண்முகபுரம் பகுதியில் வசித்து வருபவர் மணியாதவ் ஆர்த்தி தம்பதி. இவர்களுக்கு மூன்று வயதில் சர்னித்அபினவ் என்ற மகன் உள்ளான். சிறுவன் சர்னித் அபினவ் மோட்டார் தயாரிப்பு  நிறுவனங்களின் லோகோக்களை கண்ணில் பார்த்தவுடன் அந்த நிறுவனங்களின் பெயரை சரளமாக தாமதமின்றி சொல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. சிறுவனின் இந்த சாதனையை பாராட்டி இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்டு ஆகிய  சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மழலையர் பள்ளியில் ப்ரீகேஜி படித்துவரும் சிறுவன் சர்னித் அபிநவ் A FOR APPLE என்பதைக்கூட A FOR AUDI என்று கார்களின் பெயரிலேயே உச்சரிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்புமுகாம் நடக்கிறது

வரைவு வாக்காளர் பட்டியல்கள் வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலகங்களான சார் ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாநகராட்சிஆணையர் அலுவலகம், உதவி வாக்காளர் பதிவுஅலுவலர்களின் அலுவலகங்களான வட்டாட்சியர் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகம் மற்றும் நகராட்சிஅலுவலகம் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.. வரைவு வாக்காளர் பட்டியல்கள் elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது… மேலும், முதல் கட்ட சிறப்பு முகாம்கள் 21.11.2020 மற்றும்  22.11.2020  ஆகிய  தினங்களில்,  அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 வரை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய மற்றும் திருத்தம் செய்வதற்கான  படிவங்களை அளிக்கலாம். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம்-6-ல் விண்ணப்பிக்க வேண்டும். இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய படிவம்-7-ல்…

கோவில்பட்டி ராணுவ வீரர் குடும்பத்திற்கு ஆறுதல் கண்ணீர் விட்டு கலங்கிய அமைச்சர் கடம்பூர்.ராஜூ

கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் சண்முகா நகரை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் கருப்பசாமி(34). இவர் கடந்த 14 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார், நாயக் பதவி வகித்து வந்துள்ளார்.  காஷ்மீர் லடாக் பகுதியில் பணியாற்றி வந்த கருப்பசாமி நடந்த விபத்தில் வீரமரணமடைந்துள்ளார். இந்நிலையில் கருப்பசாமி வீட்டிற்கு சென்ற தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கருப்பசாமி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் தொடர்ந்து அவரின் திருவுருவ படத்திற்கு அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ மலர்தூவி மரியாதை செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் எம்.எல்.ஏ.சின்னப்பன் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செய்தனர். இதையெடுத்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கருப்பசாமி குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கினார். குழந்தைகளின் கல்வி செலவினையும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். இதில் கோட்டாட்சியர் விஜயா, ‌ தாசில்தார் மணிகண்டன், ‌ டிஎஸ்பி கலைக்கதிரவன், ‌அதிமுக நகர செயலாளர்…

இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வரும் அமித்ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார்.இன்று பிற்பகல் 1:40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் மத்திய அமைச்சர் அமித்ஷா, எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் ஓய்வு எடுக்கிறார்.  பின்னர் மாலை 4 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகையில் 380 கோடி ரூபாய் மதிப்பிலான நீர்தேக்க திட்டத்தினை காணொலி மூலம் துவக்கி வைக்கிறார். அத்துடன், 61 ஆயிரத்து 843 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னை மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையையொட்டி, சென்னையில் சுமார் 2 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சி சிதம்பரம்பிள்ளை நினைவு தினம்

ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சி என்றழைக்கப்படும் சிதம்பரம்பிள்ளைதமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் என பன்முகத் தன்மை பெற்றவர். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார், ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. 1892- ஆம் ஆண்டு பால கங்காதர திலகர் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு திலகரின் சீடரானார்.இவர் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர…

பா.ஜ.க. வில் திருப்பூர் தெற்கு மாவட்டசிறுபாண்மை அணி செயலாளராக நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் திரு.S.S.குட்டியப்பன் அவர்கள் தலைமையில் மக்கள் மித்திரன் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் டாக்டர்.D.மணியன் அவர்கள் திருப்பூர் தெற்கு மாவட்ட சிறுபாண்மை அணி செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார்.

உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் குழந்தைகளின் படிப்பு செலவை முழுவதுமாக திமுக ஏற்றுக்கும்: கனிமொழி எம்.பி உறுதி

தூத்துக்குடி: லடாக் பகுதியில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு கனிமொழி எம்.பி. திமுக சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார். கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (34). லடாக் பகுதியில் நேற்று அதிகாலை ராணுவத்திற்கான வெடிபொருட்களை வாகனத்திற்கு மாற்றும்போது விபத்து ஏற்பட்டு கருப்பசாமி படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தார்.தகவலறிந்து கருப்பசாமியின் மனைவி தமயந்தி (30) மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். கருப்பசாமிக்கு கன்யா (7), வைஷ்ணவி (5) என்ற இரு மகள்களும், ஒரு வயதில் பிரதீப்ராஜ் என்ற மகனும் உள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில் இரு மாத விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த கருப்பசாமி, கடந்த பிப்ரவரி மாதம் தான் மீண்டும் பணிக்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவ வீரரின் மறைவுச் செய்தி குறித்த தகவல் அறிந்து இன்று காலை தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தெற்கு திட்டங்குளத்தில்…