கோவில்பட்டி ராணுவ வீரர் குடும்பத்திற்கு ஆறுதல் கண்ணீர் விட்டு கலங்கிய அமைச்சர் கடம்பூர்.ராஜூ

கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் சண்முகா நகரை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் கருப்பசாமி(34). இவர் கடந்த 14 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார், நாயக் பதவி வகித்து வந்துள்ளார்.  காஷ்மீர் லடாக் பகுதியில் பணியாற்றி வந்த கருப்பசாமி நடந்த விபத்தில் வீரமரணமடைந்துள்ளார். இந்நிலையில் கருப்பசாமி வீட்டிற்கு சென்ற தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கருப்பசாமி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்

தொடர்ந்து அவரின் திருவுருவ படத்திற்கு அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ மலர்தூவி மரியாதை செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் எம்.எல்.ஏ.சின்னப்பன் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செய்தனர். இதையெடுத்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கருப்பசாமி குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கினார். குழந்தைகளின் கல்வி செலவினையும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.

இதில் கோட்டாட்சியர் விஜயா, ‌ தாசில்தார் மணிகண்டன், ‌ டிஎஸ்பி கலைக்கதிரவன், ‌அதிமுக நகர செயலாளர் விஜய பாண்டியன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ் ,அய்யாத்துரை, பாண்டியன் , வண்டானம் கருப்பசாமி  மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

கருப்பசாமி குடும்பத்தினருக்கு அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ ஆறுதல் கூறி கொண்டு இருந்த போது, கருப்பசாமியின் குழந்தைகள் அழுவதை பார்த்த அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூவும் கண்ணீர் விட்டு அழ தொடங்கினார். பின்னர் தன்னை தேற்றி கொண்டு, குழந்தை அழைத்து ஆறுதல் கூறினார்.

Related posts

Leave a Comment