வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்புமுகாம் நடக்கிறது

வரைவு வாக்காளர் பட்டியல்கள் வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலகங்களான சார் ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாநகராட்சிஆணையர் அலுவலகம், உதவி வாக்காளர் பதிவுஅலுவலர்களின் அலுவலகங்களான வட்டாட்சியர் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகம் மற்றும் நகராட்சிஅலுவலகம் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது..

வரைவு வாக்காளர் பட்டியல்கள் elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது…

மேலும், முதல் கட்ட சிறப்பு முகாம்கள் 21.11.2020 மற்றும்  22.11.2020  ஆகிய  தினங்களில்,  அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 வரை நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய மற்றும் திருத்தம் செய்வதற்கான  படிவங்களை அளிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம்-6-ல் விண்ணப்பிக்க வேண்டும். இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய படிவம்-7-ல் விண்ணப்பிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய வேண்டும் எனில் படிவம்-8-ல் விண்ணப்பிக்க வேண்டும்.

www.nvsp.in என்ற இணைய தளத்திலும் ஆன்லைனில்  பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்…”Voter Helpline” என்ற மொபைல் ஆப் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.  இரண்டாம் கட்ட சிறப்பு  முகாம்கள் 12.12.2020 மற்றும் 13.12.2020 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது.

Related posts

Leave a Comment