திருநெல்வேலி காவல்துறையினர்.உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புத்துணர்வு அளிக்கும் வகையில், யோகா பயிற்சி மேற்கொண்டனர்

திருநெல்வேலி காவல்துறையினர்.உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புத்துணர்வு அளிக்கும் வகையில், யோகா பயிற்சி மேற்கொண்டனர்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி மாவட்டத்தில் பணியாற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் மன வலிமை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புத்துணர்வு அளிக்கும் வகையில் யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இன்று(24.11.2020) ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சிசில் அவர்கள் தலைமையில் ஆயுதப்படை ஆய்வாளர் திருமதி மகேஸ்வரி அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆயுதப்படை காவல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் சிறந்த யோகா பயிற்சியாளரை கொண்டு தியான பயிற்சி, மூச்சு பயிற்சி,ஆசனப் பயிற்சி வழங்கப்பட்டது.
யோகா பயிற்சியானது சமூக இடைவெளியுடன் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

Related posts

Leave a Comment