மலிவு விலையில் உணவகம், மருத்துவமனை, மருந்தகம் கொடுத்த கோவை சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம் காலமானார்.

மலிவு விலையில் உணவகம், மருத்துவமனை, மருந்தகம் கொடுத்த  கோவை சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம் காலமானார். கோவை சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம் காலமானார் . இவர் மலிவு விலையில் உணவகம், மருத்துவமனை, மருந்தகம் இவைகளை லாப நோக்கமின்றி செயல்படுத்த கோவை திருச்சி ரோட்டில் கோவை சிங்காநல்லூரில் அமைந்திருக்கும். சாந்தி கேண்டீனில் மதிய சாப்பாடு சாப்பிட சென்றால் அங்கு பிரமாண்டமான சுத்தமான வளாகம். வரிசையில் நின்று சாப்பாட்டிற்கான டோக்கன் வாங்க வேண்டும்.ஒரு நபருக்கு ரூபாய் 20/- மட்டுமே. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். அருமையான சாப்பாடு. அங்கு வேலை செய்பவர்களிடம் இயந்திரம் தோற்றுப் போகும். அவ்வளவு வேகம். ஒரு நாளுக்கு மதிய வேளையில் 3000 நபர்களுக்கு சாப்பாடு தயார் செய்து விநியோகிப்பதாக தெரியவந்தது. அதற்கு மேல் கண்டிப்பாக கிடையாது.   இதனை நிறுவியர் பெயர் உயர்திரு பி.சுப்பிரமணியம் அவர்கள். சாந்தி கியர்ஸ்…

அம்மா நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய குண்டடம் அ.தி.மு.க வினர்

அம்மா நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய குண்டடம்  அ.தி.மு.க வினர் அதிமுக வின் பொதுச்செயலாளர் மற்றும் முன்னால் முதல்வரான ஜெயலலிதா அவர்கள் மக்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்தவர். அவரின் மறைவை நினைகூறும் வகையில் நான்காம் ஆண்டு நினைவு நாளான இன்று திருப்பூர் மாவட்டம் குண்டடம் அடுத்துள்ள மானூர்பாளையத்தில் குண்டடம் ஒன்றிய அதிமுக  செயளாலரும், ஒன்றியக்குழு துணைத்தலைவருமான செந்தில்குமார் அவர்கள் அம்மாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்பு  குண்டடம் ஒன்றிய ஒன்றியக் குழு 12-வது வார்டு உறுப்பினருமான அ.திமு.க. வை சேர்ந்த மோகனமணி குமரவேல் அவர்கள் அம்மா படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் 12- வார்டு கவுன்சிலர் மோகனமணி குமரவேல் சார்பாக இந்தியா வின் இரும்பு பெண்மணியும், ஆளுமையும் மிக்க தலைவர் ஜெயலலிதா அவர்களின் நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக அம்மாவின் புகைபடத்துடன் கூடிய …

மாற்றுத்திறனாளிகள் தினத்தில் தொழில் நிறுவனம் துவங்கிய மாற்றுத்திறனாளிகள்!

 மாற்றுத்திறனாளிகள் தினத்தில் தொழில் நிறுவனம் துவங்கிய மாற்றுத்திறனாளிகள்! ஈரோடு  பீனிக் ஷ் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் மற்றும் டிசம்பர்-3 இயக்கம்  இணைந்து சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான நேற்று டிசம்பர்-3-ல் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் நிறுவனம் துவக்கவிழா  ஈரோட்டில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பீனக் ஷ்  அக்ரிகல்சர் புராடாக்ட்ஸ் (பி) லிமிடெட்  என்னும் இத் தொழில் நிறுவனத்தை அமிர்தா பால் நிறுவனர் (எம்.டி) ஆர்.மோகனசுந்தரம் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார், மேலும் இந்நிறுவனத்தின் முதல் விற்பனையை .ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் சீனிவாசன் துவக்கி வைத்தார். இவ்விழாவிற்கு ஈரோடு பீனிக் ஷ் மாற்றுத்திறனாளிகள் நலசங்க தலைவலர் என்.ஜெயப்பிரகாஷ் தலைமையேற்று  நடத்தினார். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான  டிசம்பர்-3-ல் பீனக் ஷ்  அக்ரிகல்சர் புராடாக்ட்ஸ் (பி) லிமிடெட் நிறுவனத்தை துவங்கியதை பற்றி என்.ஜெயப்பிரகாஷ் கூறுகையில் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து இயங்கவுள்ளதாகவும், எங்களிடம் தற்போது நாட்டுசர்க்கரை, பூண்டு,…

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் ‘சார்பட்டா பரம்பரை’ பஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடு

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் ‘சார்பட்டா பரம்பரை’ பஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடு ‘K9 STUDIOS’ மற்றும் ‘நீலம் புரடொக்‌ஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். வட சென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச் சண்டையை மையமாக வைத்து முழுக்க, முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். இந்த திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடலமைப்பை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார். அவர் மட்டுமல்லாமல், அவரோடு நடித்திருக்கும் நடிகர்கள் ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர் ஆகியோரும் இப்படத்திற்காக கட்டுமஸ்த்தான உடற்கட்டோடு நடித்திருக்கிறார்கள். கதாநாயகியாக துஷாரா அறிமுகமாகிறார். நடிகர் பசுபதி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களோடு ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு…

ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக ரஜினிகாந்த் அறிவிப்பு

ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக ரஜினிகாந்த் அறிவிப்பு வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.இது தொடர்பான அறிவிப்பு டிசம்பர் 31-ம் தேதி வெளியாகும் ரஜினிகாந்த் அறிவிப்பில் வரும் சட்டமன்ற தேர்தலில், 2021 –ல் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் நேர்மையான, ஊழலற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம் மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல   அற்புதம்.. அதிசயம்.. நிகழும் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

கிரிக்கெட்டில் கால்பதித்தார் சேலம் நடராஜன்

கிரிக்கெட்டில் கால்பதித்தார் சேலம் நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் அறிமுக வீரராக களம் இறங்கினார். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த 29 வயதான நடராஜன், தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட்டின் மூலம் பிரபலம் ஆனார். அதில் அவரது பந்து வீச்சை கண்டு வியந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு அவரை ஏலத்தில் எடுத்தது. அப்போது அவர் ஜொலிக்கவில்லை. இந்த ஐ.பி.எல். சீசனில்  சன்ரைசர்ஸ் அணிக்காக களம் கண்டு பிரமாதப்படுத்தினார். 16 ஆட்டங்களில் 16 விக்கெட் கைப்பற்றியதோடு, மொத்தம் 71 யார்க்கர் பந்துகளை வீசி கவனத்தை ஈர்த்தார். அதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் வலை பயிற்சி பவுலராக தேர்வு செய்யப்பட்டார். பிறகு சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி காயத்தால் விலகியதால்…

இராமநாதபுரம் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

இராமநாதபுரம் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர் புரெவி புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்பதால் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல்  இரவு இலங்கையில் கரையைக் கடந்து டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை குமரி – பாம்பன் இடையே கரையைக் கடக்க உள்ளது. இதனால் தென் தமிழக மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ரஜ் ஆலிவர் வெளியிட்ட செய்தியில், புரெவி புயல் கரையைக் கடக்க உள்ளதால் ராமநாதபுரம் மக்கள் டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண…

தேவகோட்டையில் தமிழக அரசின் ‘கற்போம் எழுதுவோம்’ திட்ட துவக்க விழா

தேவகோட்டையில்  தமிழக அரசின்   ‘கற்போம் எழுதுவோம்’ திட்ட துவக்க விழா  தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சிறப்பு பயிற்சி மையத்தில் தமிழக அரசின்   ‘கற்போம் எழுதுவோம்’ திட்டத்தினை கல்லூரி முதல்வர் துவக்கி வைத்தார்.                                             தமிழ்நாடு பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கம் , 15 வயதுக்கு மேற்பட்ட அடிப்படை கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு, ‘கற்போம் எழுதுவோம்’ என்ற பெயரில் புதிய வயது வந்தோர் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. .சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சிறப்பு பயிற்சி மையமான நடராஜபுரம் சின்ன மாரியம்மன் கோவில் அருகில் இத்திட்டத்திற்கான துவக்க விழா நடைபெற்றது. ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி  தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.  தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை…