பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் ‘சார்பட்டா பரம்பரை’ பஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடு

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் ‘சார்பட்டா பரம்பரை’ பஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடு ‘K9 STUDIOS’ மற்றும் ‘நீலம் புரடொக்‌ஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். வட சென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச் சண்டையை மையமாக வைத்து முழுக்க, முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். இந்த திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடலமைப்பை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார். அவர் மட்டுமல்லாமல், அவரோடு நடித்திருக்கும் நடிகர்கள் ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர் ஆகியோரும் இப்படத்திற்காக கட்டுமஸ்த்தான உடற்கட்டோடு நடித்திருக்கிறார்கள். கதாநாயகியாக துஷாரா அறிமுகமாகிறார். நடிகர் பசுபதி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களோடு ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு…

ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக ரஜினிகாந்த் அறிவிப்பு

ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக ரஜினிகாந்த் அறிவிப்பு வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.இது தொடர்பான அறிவிப்பு டிசம்பர் 31-ம் தேதி வெளியாகும் ரஜினிகாந்த் அறிவிப்பில் வரும் சட்டமன்ற தேர்தலில், 2021 –ல் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் நேர்மையான, ஊழலற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம் மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல   அற்புதம்.. அதிசயம்.. நிகழும் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

கிரிக்கெட்டில் கால்பதித்தார் சேலம் நடராஜன்

கிரிக்கெட்டில் கால்பதித்தார் சேலம் நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் அறிமுக வீரராக களம் இறங்கினார். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த 29 வயதான நடராஜன், தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட்டின் மூலம் பிரபலம் ஆனார். அதில் அவரது பந்து வீச்சை கண்டு வியந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு அவரை ஏலத்தில் எடுத்தது. அப்போது அவர் ஜொலிக்கவில்லை. இந்த ஐ.பி.எல். சீசனில்  சன்ரைசர்ஸ் அணிக்காக களம் கண்டு பிரமாதப்படுத்தினார். 16 ஆட்டங்களில் 16 விக்கெட் கைப்பற்றியதோடு, மொத்தம் 71 யார்க்கர் பந்துகளை வீசி கவனத்தை ஈர்த்தார். அதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் வலை பயிற்சி பவுலராக தேர்வு செய்யப்பட்டார். பிறகு சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி காயத்தால் விலகியதால்…

இராமநாதபுரம் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

இராமநாதபுரம் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர் புரெவி புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்பதால் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல்  இரவு இலங்கையில் கரையைக் கடந்து டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை குமரி – பாம்பன் இடையே கரையைக் கடக்க உள்ளது. இதனால் தென் தமிழக மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ரஜ் ஆலிவர் வெளியிட்ட செய்தியில், புரெவி புயல் கரையைக் கடக்க உள்ளதால் ராமநாதபுரம் மக்கள் டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண…