மாற்றுத்திறனாளிகள் தினத்தில் தொழில் நிறுவனம் துவங்கிய மாற்றுத்திறனாளிகள்!

 மாற்றுத்திறனாளிகள் தினத்தில்

தொழில் நிறுவனம் துவங்கிய மாற்றுத்திறனாளிகள்!

ஈரோடு  பீனிக் ஷ் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் மற்றும் டிசம்பர்-3 இயக்கம்  இணைந்து சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான நேற்று டிசம்பர்-3-ல் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் நிறுவனம் துவக்கவிழா  ஈரோட்டில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

பீனக் ஷ்  அக்ரிகல்சர் புராடாக்ட்ஸ் (பி) லிமிடெட்  என்னும் இத் தொழில் நிறுவனத்தை அமிர்தா பால் நிறுவனர் (எம்.டி) ஆர்.மோகனசுந்தரம் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார், மேலும் இந்நிறுவனத்தின் முதல் விற்பனையை .ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் சீனிவாசன் துவக்கி வைத்தார். இவ்விழாவிற்கு ஈரோடு பீனிக் ஷ் மாற்றுத்திறனாளிகள் நலசங்க தலைவலர் என்.ஜெயப்பிரகாஷ் தலைமையேற்று  நடத்தினார்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான  டிசம்பர்-3-ல் பீனக் ஷ்  அக்ரிகல்சர் புராடாக்ட்ஸ் (பி) லிமிடெட் நிறுவனத்தை துவங்கியதை பற்றி என்.ஜெயப்பிரகாஷ் கூறுகையில் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து இயங்கவுள்ளதாகவும், எங்களிடம் தற்போது நாட்டுசர்க்கரை, பூண்டு, முந்திரி போன்ற பொருட்கள் தயாராக இருக்கிறது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலையும் அத்துடன் நாங்கள் யாரை எதிர்பார்த்து இல்லாமல் எங்களை போன்று இருக்கும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தை நடத்த  உதவியாக இருக்கும். என்ற உறுதியான மனதுடன் நிறுவனத்தை துவங்கியுள்ளோம்.

இந்நிறுவனத்தின் பொருட்கள் மார்க்கெட்டில் சந்தைபடுத்தும் டீலர்சிப்பும் கூட மாற்றுத்திறனாளிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். எங்களின் நிறுவனத்துக்கு அனைவரின் ஆதரவக்காக காத்திருக்கிறோம் என்றார்.

மாற்றத்தை நோக்கி தொழில் பயணத்தை தொடங்கிய பீனக் ஷ்  அக்ரிகல்சர் புராடாக்ட்ஸ் (பி) லிமிடெட் நிறுவனத்தாருக்கு நாமும் ஆதரவளிப்போம். 

                                                            

Related posts

Leave a Comment