அம்மா நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய குண்டடம் அ.தி.மு.க வினர்
அதிமுக வின் பொதுச்செயலாளர் மற்றும் முன்னால் முதல்வரான ஜெயலலிதா அவர்கள் மக்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்தவர்.
அவரின் மறைவை நினைகூறும் வகையில் நான்காம் ஆண்டு நினைவு நாளான இன்று திருப்பூர் மாவட்டம் குண்டடம் அடுத்துள்ள மானூர்பாளையத்தில் குண்டடம் ஒன்றிய அதிமுக செயளாலரும், ஒன்றியக்குழு துணைத்தலைவருமான செந்தில்குமார் அவர்கள் அம்மாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்பு குண்டடம் ஒன்றிய ஒன்றியக் குழு 12-வது வார்டு உறுப்பினருமான அ.திமு.க. வை சேர்ந்த மோகனமணி குமரவேல் அவர்கள் அம்மா படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் 12- வார்டு கவுன்சிலர் மோகனமணி குமரவேல் சார்பாக இந்தியா வின் இரும்பு பெண்மணியும், ஆளுமையும் மிக்க தலைவர் ஜெயலலிதா அவர்களின் நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக அம்மாவின் புகைபடத்துடன் கூடிய போஸ்டர் குண்டடம் சடையபாளையம் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் அம்மாவின் முகத்தை பார்த்த மக்கள் பலரும் அம்மாவை நினைவு கூறும் வகையில் அமைந்துள்ளது என்றனர்.
இந்நிகழ்வில் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சி.லோகநாதன், கிளை தலைவர் K.சந்திரசேகரன், கிளை செயலாளர் M.P தர்மராஜ், பொருலாளர் N.மயில்சாமி மற்றும் தொண்டர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.