ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் சார்பாக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் வாரவிழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ஈரோடு ஸ்பைஸ்  ரவுண்ட் டேபிள் சார்பாக மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இதுதொடர்பாக ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் 211 அமைப்பின் தலைவர் தர்மராஜ், செயலாளர் சக்திகணேஷ், பொருளாளர் சிவகுமார் ஆகியோர் தெரிவித்துள்ளதாவது, ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பு 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட இளம் வயதினரை கொண்ட சமூக சேவையை மட்டும் குறிக்கோளாக கொண்ட அமைப்பாகும்.  இந்த அமைப்பின் சார்பில் இந்தியா முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் 2 ஆயிரத்து 849 பள்ளிகளில் 282 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 ஆயிரத்து 625 வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.  இதன் மூலமாக 72.80 லட்சம் குழந்தைகள் பயன் பெற்றுள்ளனர். மேலும் 3 லட்சம் குழந்தைகளுக்கு…

ஐ.ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது : கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல்!

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி  நிறுவனமான   ஐ.ஐ.டி-யில் சமூகவியல் துறையில் முதலாமாண்டு படித்து வந்த கேரளா கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த 8 ஆம் தேதி அவர் தங்கியுள்ள  விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்  என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதணையும் அளித்துள்ளது. இனி வரும் காலங்களில் இது போண்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது . மாணவி பாத்திமாவை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும்  அனுதாபங்களையும்  தெரிவித்து கொள்கிறோம். எனவே  : மாணவி பாத்திமா தற்கொலைக்கு  காரணமானவர்கள்…

கீழ்வேளூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம்கீழ்வேளூர்  கிருஷ்ணா மஹால்  மண்டபத்தில் 14- 11- 2019- அன்று  மாலை 4 மணி அளவில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை அமைச்சர் திரு .ஓ .எஸ். மணியன் அவர்கள் வழங்கினார். இதில் பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் மீனவர்களுக்கு மீன்பிடி எந்திரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்  ஊனமுற்றவர்களுக்கு  உதவி திட்டம்    போன்ற   பல்வேறு திட்டங்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவர்கள் வழங்கினார்.

உடுமலை அருகே காலி மதுபாட்டில் குடோனால் விவசாயிகள் வேதனை

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த ஜிலேபி நாயக்கன் பாளையத்தில் முறைகேடாக மதுபாட்டில்களை எடுத்து வந்து. ரசாயன பொருட்களை பயன்படுத்தி அதன் கழிவுகளை பூமிக்கடியில் விடுவதால்  அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள் பாழாகி  வருவதாக விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர். மேலும், கம்பெனியில் எங்கிருந்து மது பாட்டில்கள் எடுத்து வரப்படுகிறது என்பது தெரியவில்லை. தவிர,  சுத்தம் செய்யப்படாமல் மதுபாட்டில்களை எடுத்துவந்து எந்த உரிமமும் இல்லாமலும் நிறுவனத்தின் பெயர் பலகை இல்லாமலும் பெண்கள் பலரை பணியில் அமர்த்தி மதுபாட்டில்களை சுத்தம் செய்து கழிவுகளை பூமிக்கடியில் விடுவதால் விளைநிலங்கள் சேதம் அடைவதோடு மட்டுமில்லாமல் முகம் சுளிக்க கூடிய அளவில் துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு விளை நிலங்கள் பாழாகும் அபாயத்தை தடுக்கும் வகையில, மாவட்ட நிர்வாகம், மது பாட்டில்களை கழுவும் கம்பெனி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்…

குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளும் குணங்கள் நடிகர் விவேக்

குழந்தைகள் தினமான இன்று நகைச்சுவை நடிகர் விவேக் குழந்தைகளிடம்  பாசம், நேர்மை, உண்மை,தூய இதயம், பாசங்கு இன்மை போன்ற நற்குணங்களை கற்றுக்கொள்ளலாம்  என்று வாழ்த்துக்களோடு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குடியிருப்புக்களுக்குள் வெள்ள நீா் புகுந்தது

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மில்மேடு பகுதியில் கீழ்பவானி பிரதான கால்வாயில்  உடைப்பு ஏற்பட்டதில் கேத்தம்பாளைம் சின்னபீளமேடு ஆகிய இரு கிராமங்களில் குடியிருப்புக்களுக்குள் வெள்ள நீா் புகுந்ததில் பாதிக்கப்பட்ட 128 குடும்பங்களுக்கு தலா பத்து கிலோ அரிசி வேட்டி சேலை மற்றும் ரூ.6200 நிவாரனத்தொகை அரசு சார்பிலும் அதிமுக கழகத்தின் சார்பில் தலா ரூ.5 ஆயிரம் என மொத்தமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.11200  ஆகியவற்றை மாண்புமிகு  பள்ளிக்கல்வி, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை  அமைச்சா் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் மற்றும் மாண்புமிகு  சுற்றுச்சூழல்துறை அமைச்சா் திரு.கே.சி.கருப்பணன் அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள். முன்னதாக வெள்ள நீா் புகுந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை மாண்புமிகு  அமைச்சா்கள் பெருமக்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்….

மதுரை பெரியார் பேருந்து நிலைய பணிகள். விரைந்து முடிக்க அதிகாரிகள் ஆலோசனை.

மதுரை பெரியார் பேருந்து நிலையம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நவீனமாக மாற்றப்பட உள்ள பணிகள் தீவிரம். விரைந்து முடிக்க அதிகாரிகள் ஆலோசனை. மதுரை பெரியார் பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இதற்கான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 159.7 கோடி ரூபாயை மதுரை மாநகராட்சி நிதி ஒதுக்கியது. இதற்கான தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களால் கடந்த ஆறு மாதம் முன்பே அடிக்கல் நாட்டப்பட்டது. பணிக்காக காம்ப்ளக்ஸ்களும், பஸ் ஸ்டாண்டும் இடிக்கப்பட்டு ஒப்பந்தக்காரர்கள் P&C. புரொடக்க்ஷன்ஸ் சார்பில் புதிய பேருந்து நிறுத்தம் பணி துவங்கி நடைபெற்று வரும் நிலையில் 7 தளங்கள் அமைக்கும் பணியினை மாநகராட்சி பொறியாளர் சேகர், உதவிப் பொறியாளர் சேவியர், தியாகு ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். தற்போது இரு தரை கீழ் தளங்கள் அமைப்பதற்கான ராட்ச்சச பள்ளம் தோண்டும்…

சுர்ஜித்துக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர்கள்

திருச்சி மணப்பாறை, நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சுர்ஜித் என்ற 2 வயது சிறுவனுக்கு மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். உடன் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் பா.ஆறுமுகம் மற்றும் பலர் உள்ளனர்.

திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மானூர்பாளையத்தில் மக்கள் முகாம்.

குண்டடம் வட்டாரம் மானூர்பாளைம் கிராமத்தில் பொதுமக்களுக்கு  அரசின் நலத்திட்ட உதவிகளை திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் வழங்கினார்.  தாராபுரம் தாலுக்கா, குண்டடம் வட்டாரத்தில் சடையபாளைம் ஊராட்சியில் உள்ள மானூர்பாளையம் கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலரின் முன்னிலையில் 26.9.2019 இன்று வியாழக்கிழமை மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.  இதில் முன்னால் சடையபாளைம் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி அவர்களும், மற்றும் தாராபுரம் வட்டாட்சியர் ரவிச்சந்திரன், குண்டடம் வருவாய் உள்வட்ட ஆய்வாளர் தீனதயாளான், மானூர்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ரம்யா, ஏரகாம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் முத்துசாமி போன்ற அதிகாரிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர். குண்டடம் வட்டார வேளாண்மைத்துறை, சமூக நலத்துறை, பொது சுகாதாரத்துறை தாயம்பாளையம், கால்நடை பராமரிப்புத்துறை தாராபுரம் சரகம், ஒருகிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் என துறை வாரியாக கண்காட்சி சிறு…

திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். விஜயகார்த்திகேயன்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியராக விஜயகார்த்திகேயன் அவர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழகம் முழுவதும்  தமிழக அரசால் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்  பணிமாறுதல் செய்யப்பட்டனர். இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிவந்த  கே.எஸ். பழனிசாமி அவர்கள் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சியராக  விஜயகார்த்திகேயன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார்.  திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பெற்ற விஜயகார்த்திகேயன் திருப்பூர் மாவட்ட பொதுமக்களின் தங்களது குறைகளை களைய என்நேரமும் என்னை அனுகலாம் என்று புதிதாக பொறுப்பேற்ற திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கூறியுள்ளார்.  அவரது பணி சிறக்க மக்கள்மித்திரன்  பத்திரிக்கை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.