பாராத பிரதமரிடம் பாராட்டு பெற்ற குண்டடம் ஒன்றிய செயலாளர்கள்

தாராபுரம் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி பிரசாரத்திற்காக திருப்பூர் தாராபுரத்திற்கு வருகை தந்தார். அவருக்கு பிரசார பொதுக்கூட்டத்தில் வேல் பரிசாக அளிக்கப்பட்டது. தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகன் பிரதமருக்கு வேல் அளித்தார். முதல்வர் துனை முதல்வர் கலந்துகொண்டனர். இதன்பின்னர் பிரதமர் மோடி கூட்டத்தில் பேசினார். அதன் பின்பு பிரதமர் மோடியுடன் கூட்டணி கட்சியான அதிமுக குண்டடம் மேற்கு ஒன்றிய செயலாளர் பி.செந்தில்குமார். பி.காம் மற்றும் குண்டடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம் அவர்கள் தேர்தல் களப்பணியில் பாராட்டு பெற்றனர்.

இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வரும் அமித்ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார்.இன்று பிற்பகல் 1:40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் மத்திய அமைச்சர் அமித்ஷா, எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் ஓய்வு எடுக்கிறார்.  பின்னர் மாலை 4 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகையில் 380 கோடி ரூபாய் மதிப்பிலான நீர்தேக்க திட்டத்தினை காணொலி மூலம் துவக்கி வைக்கிறார். அத்துடன், 61 ஆயிரத்து 843 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னை மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையையொட்டி, சென்னையில் சுமார் 2 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பா.ஜ.க. வில் திருப்பூர் தெற்கு மாவட்டசிறுபாண்மை அணி செயலாளராக நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் திரு.S.S.குட்டியப்பன் அவர்கள் தலைமையில் மக்கள் மித்திரன் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் டாக்டர்.D.மணியன் அவர்கள் திருப்பூர் தெற்கு மாவட்ட சிறுபாண்மை அணி செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார்.

உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் குழந்தைகளின் படிப்பு செலவை முழுவதுமாக திமுக ஏற்றுக்கும்: கனிமொழி எம்.பி உறுதி

தூத்துக்குடி: லடாக் பகுதியில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு கனிமொழி எம்.பி. திமுக சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார். கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (34). லடாக் பகுதியில் நேற்று அதிகாலை ராணுவத்திற்கான வெடிபொருட்களை வாகனத்திற்கு மாற்றும்போது விபத்து ஏற்பட்டு கருப்பசாமி படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தார்.தகவலறிந்து கருப்பசாமியின் மனைவி தமயந்தி (30) மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். கருப்பசாமிக்கு கன்யா (7), வைஷ்ணவி (5) என்ற இரு மகள்களும், ஒரு வயதில் பிரதீப்ராஜ் என்ற மகனும் உள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில் இரு மாத விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த கருப்பசாமி, கடந்த பிப்ரவரி மாதம் தான் மீண்டும் பணிக்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவ வீரரின் மறைவுச் செய்தி குறித்த தகவல் அறிந்து இன்று காலை தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தெற்கு திட்டங்குளத்தில்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று இரவில் சென்னை, தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.இந்நிலையில், விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல்கள் தேமுதிக கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆனால், விஜயகாந்திற்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தற்போது விஜயகாந்தின் உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளது.6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக, விஜயகாந்த் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம், பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு சென்ற போது அவருக்கு லேசாக தென்பட்ட கொரோனா அறிகுறி, சரி செய்யப்பட்டு விட்டதாகவும். தேமுதிக தலைவர் .விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார். என தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

ஐ.ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது : கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல்!

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி  நிறுவனமான   ஐ.ஐ.டி-யில் சமூகவியல் துறையில் முதலாமாண்டு படித்து வந்த கேரளா கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த 8 ஆம் தேதி அவர் தங்கியுள்ள  விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்  என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதணையும் அளித்துள்ளது. இனி வரும் காலங்களில் இது போண்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது . மாணவி பாத்திமாவை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும்  அனுதாபங்களையும்  தெரிவித்து கொள்கிறோம். எனவே  : மாணவி பாத்திமா தற்கொலைக்கு  காரணமானவர்கள்…

கீழ்வேளூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம்கீழ்வேளூர்  கிருஷ்ணா மஹால்  மண்டபத்தில் 14- 11- 2019- அன்று  மாலை 4 மணி அளவில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை அமைச்சர் திரு .ஓ .எஸ். மணியன் அவர்கள் வழங்கினார். இதில் பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் மீனவர்களுக்கு மீன்பிடி எந்திரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்  ஊனமுற்றவர்களுக்கு  உதவி திட்டம்    போன்ற   பல்வேறு திட்டங்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவர்கள் வழங்கினார்.

மதுரையில் மக்களிடம் மனுக்களை பெற்றார். அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை துவக்கி வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். மதுரை மாவட்டத்தில்  இன்று உசிலம்பட்டி, திருமங்கலம், பேரையூர், கள்ளிக்குடி, வாடிப்பட்டி, ஆகிய இடங்களில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை துவக்கி மக்களிடத்திலிருந்து மனுக்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெற்றார்

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

சென்னை கோயம்பேடு தே.மு.தி.க வின் தலைமைக் கழகத்தில் விஜயகாந்தின் பிறந்த நாள்  தினத்தையொட்டி வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடித்து வருடவருடம் நலத்திட்ட உதவிகளை  முதியவர்களுக்கு, குழந்தைகளுக்கு, ஊனமுற்றோர்களுக்கு வழங்கி வருவதாகவும் தே.மு.தி.க வின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.  இன்றைய விழாவில் குழந்தைகள் விஜயகாந்திற்கு இனிப்புகளை வழங்கினார்கள், அவரும் குழந்தைகளுக்கு இனிப்பை வழங்கினார். இதே போல் தன்னுடைய பிறந்த நாளில் கழக நிர்வாகிகளும், கழகத்தொண்டர்களும்  பல நலத்திட்டங்களை செய்யவேண்டுமன கேட்டு கொள்கிறேன். என  தே.மு.தி.க. தலைவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உதயமான இளைய சூரியன்,உதயநிதி!! சினிமா தயாரிப்பாளர், கதாநாயகன், கட்சி.

தி.மு.க. வில் இளைஞரணி  செயலாளரானார் உதயநிதி ஸ்டாலின். தி.மு.க. கழக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்தார். சினிமா தயாரிப்பாளர், கதாநாயகனை, தொடர்ந்து தி.மு.க.கட்சியிலும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார். இவர் நாயகனாக நடித்த படங்களில் காமெடி,ஆக்ஷன் போன்ற கலவையான நடிப்பால்  அவருக்கே உரிய நடிப்பு திறமையை வெளிக்காட்டியதன் மூலமாக மெல்ல,மெல்ல மக்களிடம் தான் சிறந்த நடிகன் என்று அறிமுகமானார். தற்போதுஅரசியல் பயணைத்தை தொடங்கியுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில்  உதயநிதி ஸ்டாலின் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளி பிரச்சாரம் செய்தார். அவரது பேச்சு மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது.   அதையடுத்து தி.மு.க.வும் அமோக வெற்றி பெற்றது. உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியில் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை  எழுந்ததது.  தி.மு.க.வில் இளைஞரணி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கடந்த முப்பது  ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டாலின்  இளைஞரணி  செயலாளராக செயல்பட்டு வந்தார். அதன்பின்பு ஒவ்வொரு…