முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததால் அவர் இன்று காலமானார்.  அவரின் மறைவுக்கு பாராத பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவின், அரசியல் பயணம்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட மத்திய வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் சுஷ்மா ‎ஆகஸ்ட் 6-ந்தேதி இரவு காலமானார். வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கிய அவரின் அரசியல் பயணம்.  வெளியுறவுத்துறை மந்திரியாகவும் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர். இந்தியாவின்  பதினைந்தாவது மக்களவையின் எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார். இவர் டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக ஏழு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லியின் ஐந்தாவது முதலமைச்சராக பதவி ஏற்றார்.  மேலும் அவர் டெல்லியின் முதல் பெண் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்திரா காந்திக்குப் பிறகு வெளியுறவுத்துறை மந்திரி பதவி வகித்த இரண்டாவது பெண் சுஷ்மா சுவராஜ் ஆவார்.  2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான இந்திய-இஸ்ரேல் நாடாளுமன்ற நட்புக் குழுவின் தலைவராக செயல்பட்டார்.  2009 ஆம் ஆண்டு…

மும்பையில் கனமழை: 54 விமானங்கள் திருப்பி விடப்பட்டன

மும்பையில் கடந்த 4 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மும்பை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. கனமழை இன்னும் 3 தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதை மூடப்பட்டது. 54 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. மும்பை வரவிருந்த 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விஸ்தாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.