விஜய் நடித்துள்ள “மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும்”

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும் மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் “திரை அரங்குகளை திறந்த பின்னர் மாஸ்டர் படம் ரிலீஸாகும்” “மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டி. தளங்களில் வெளியாக வாய்ப்பு இல்லை

குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளும் குணங்கள் நடிகர் விவேக்

குழந்தைகள் தினமான இன்று நகைச்சுவை நடிகர் விவேக் குழந்தைகளிடம்  பாசம், நேர்மை, உண்மை,தூய இதயம், பாசங்கு இன்மை போன்ற நற்குணங்களை கற்றுக்கொள்ளலாம்  என்று வாழ்த்துக்களோடு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சூர்யாவின் 39 வது படத்தை இயக்கும் சிவா

நடிகர் சூர்யாவுடன் அவரது 39 படத்தை இயக்குகிறார் சிவா. அவரின்  பிறந்த நாளில் வெளியாகி டிரென்டிங்கனாது. சிவா அவருடைய டீமின்  ஆக்சன், குடும்பம், காதல் கலந்த கலவையான பல வெற்றி படங்களை தந்துள்ளார். ஸ்டுடியோ கீரின் தயாரிப்பில் சூர்யா, இயக்குநர் சிவா, இசை டி.இமான்,  ஒளிப்பதிவு வெற்றி, படத்தொகுப்பு ரூபன் கலை மிலன், போன்றவர்கள்  இணைந்து பணியாற்றபோவதாக அறிவித்துள்ளனர்.

நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

சிவகாரத்திக்கேயன் நடித்து வரும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். பாண்டிராஜ் உடன் மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா வை, தொடர்ந்து. இவர்களின் கூட்டணியில் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. படத்தின் போஸ்டரில்  கிராமத்து பின்னனியை கொண்ட. ஆக்சன் கலந்த சிவகார்த்திகேயனின் தோற்றம் ரசிகர்களை மகிழ்ச்சியடை செய்துள்ளது.  நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுடன் அனுஇம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சூரி,யோகிபாபு, மற்றும் பலரும் படத்திற்கு இசை டி.இமான்,  மேலும் படத்தின் பார்ஸட் லுக் போஸ்டரில் செப்டம்பரில் கொண்டாட்டம் குறிப்பிடபட்டுள்ளது.

A1 படத்தின் செகண்ட் டீசர் வெளியானது.

சந்தானம் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் A1 அக்யுஸ்ட் நெம்பர் ஒன் இரண்டாவது டீசர் வெளியானது. படம் காதல், காமெடி கலந்த  கலவையான  படக்கதையாக டீசர் வெளியாகியுள்ளது. படத்தை ஜான்சன்.கே இயக்கியுள்ளார். இசை சாந்தோஸ் நாராயாணன்,    நாயகி தாரா, மொட்டை ராஜேந்திரன், மனோகர், சாமிநாதன், சாய்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தை எஸ். ராஜ் நாராயாணன் தயாரித்துள்ளார். படம் ஜீலை 26 தேதி  வெளிவரவிருக்கிறது.  

அஜித்தின் நேர்கொண்ட பார்வை

இரண்டாவது  பாடல் வெளியாகியது.    அஜித்குமார் நடிப்பில் விசுவாஸம்  திரைப்படத்திற்கு பின்பு இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படம். நடிகை ஸ்ரீதேவியின்  கணவர் போனிகபூர் தயாரிப்பில் உருவான படத்தில் ஏற்கனவே ட்ரெய்லர் மற்றும் வானில் இருள் பாடல்வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.தற்போது இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.படம் ஆகஸ்ட்டு மாதம் வெளியாகவுள்ளது.

இன்று நேற்று நாளை இரண்டாம் பாகம்.

விஷ்னு விசால் நடிப்பில்  இன்று நேற்று நாளை படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்ததது. படத்தில் விஷ்னு விசால்,மியா ஜார்ஜ், கருணாகரன் ஜெயப்பிரகாஷ், பகவதிபொருமாள், போன்ற நட்சத்திரங்கள் நடித்திருந்தினர்.படத்தை இயக்குநர் ஆர்.ரவிக்குமார் இயக்கினார்.  நகைச்சுவை, மற்றும் விஞ்ஞானம் கலந்த கலவையான படமாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியாகி நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இரண்டாம் பாகம் பற்றி அறிவித்துள்ளனர் தயாரிப்பாளர்கள். கதை திரைக்கதை வசனத்தை ஆர்.ரவிக்குமார் எழுதியுள்ளார் அவருடன் பணியாற்றிய இணை இயக்குநர் எஸ்.பி.கார்த்திக் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.