ஊரடங்கிலும் மாணவர்களை புத்தகம் படிக்க மொபைல் போன் வழியாக ஆர்வப்படுத்தும் ஆசிரியர்கள்

தேவகோட்டை – ஊரடங்கு நேரத்திலும் மொபைல் போன் வழியாக மாணவர்களை ஆர்வப்படுத்தி புத்தகங்களை வாசிக்க சொல்லி வருகின்றனர். தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள். ஊரடங்கு துவங்கும் நாளுக்கு முன்னதாக இப்பள்ளியில் 6,7,8 வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு வீட்டில் படித்து வர புத்தகங்கள் வழங்கப்பட்டது.     தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களுக்கு ஊரடங்கு காலத்தில் விடுமுறைக்கு முன்பு வீட்டில்  ஒவ்வொரு மாணவரும் படிக்கும் வகையில் மாணவர்களின் வீட்டுக்கு நான்கு ,நான்கு புத்தகங்கள் கொடுத்து படிக்க சொல்லி கொடுத்து அனுப்பினார்கள். அதன் தொடர்ச்சியாக மாணவர்களின் வீட்டுக்கு ஆசிரியர்கள் மொபைல் போன் வழியாக பேசி மாணவர்களின் நலன் விசாரிப்பதோடு, புத்தகங்களையும் படிக்க சொல்லி வருகின்றனர். புத்தகம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கருப்பையா ,ஸ்ரீதர், முத்து மீனாள்,முத்து லெட்சுமி,செல்வமீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.மாணவர்களுக்கு புத்தகம் படிப்பதில்…

உடுமலையில் சாலைபாதுகாப்பு பேரணி

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பொதுமக்களுக்கு சாலைபாதுகாப்பை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி காவல்துறையினர் அசத்தல். தமிழகம் முழுவதும் ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வாகனங்களில் ஹெல்மட், சீட்பெல்ட்  அணிந்து பாதுகாப்பாக விபத்தில்ல பயணம் செய்திட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலைபாதுகாப்பு வார விழா நடைபெற்று வருகிறது. சாலையில் பாதுகாப்பான பயணத்தைபற்றி விளக்கும் விதமாக   உடுமலையில் 21.01.2020 நேற்று 31-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் 21.01.2020 அன்று சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை  துவக்கி வைத்தார். இதில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுப்புராமன், போக்குவரத்து எஸ்.ஐ., போக்குவரத்து காவலர்கள், மோட்டார்வாகன ஆய்வாளர் செல்வதீபா  சட்டம் ஒழுங்கு எஸ்.ஐ. ஆனந்தகிருஷ்ணன்,காவலர்கள் மற்றும் மாணவ,மாணவிகள், தன்னார்வலர்கள், ஓட்டுனர்களும் கலந்துகொண்டு சாலைபாதுகாப்பு பேரணியை சிறப்பித்தனர்.  உடுமலை காவல்துறையின் இந்த விழிப்புணர்வுபேரணி வெருமெனவாக  இல்லாமல் பொதுமக்கள் மனதில்…

சடையபாளையம் ஊராட்சியில் தலைவர் பதவியேற்பு

குண்டடம் ஊராட்சிஒன்றியம்  சடையபாளையம் ஊராட்சியில் (06.01.2020) அன்று சடையபாளையம் ஊராட்சி தலைவராக ப.ஈஸ்வரன் அவர்கள் பதவியேற்றார். திருப்பூர்மாவட்டம் குண்டடம்ஒன்றியத்தில் சடையபாளைம் ஊராட்சிதலைவர், மற்றும் வார்டுஉறுப்பினர்கள்  சடையபாளையம் ஊராட்சி அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டனர்.   சுமார் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். பதவியேற்புக்கு பின்னர் ஊராட்சிதலைவர் ப.ஈஸ்வரன் அவர்கள் பொதுமக்கள் முன்பு பேசும்போது மக்களுக்கு நன்றி தெரிவித்தார். ஊராட்சி மக்களின் அடிப்படை தேவைகளையும், இனிவரும் நாட்களில் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து அதை நிறைவேற்றுவதாகவும்.  ஊராட்சியிலுள்ள மக்கள் ஊராட்சிஅலுவலகத்தில் தன்னை எளிதாக சந்திக்கலாம் எனவும், சடையபாளையம் ஊராட்சிக்கு சிறந்த தலைவராக பணிசெய்வதே என்கடமை என்று உரையை நிறைவுசெய்தார்.  

புதியதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் குறைதீர்க்கும் நாள்

புதியதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்த குறை தீர்க்கும் நாளில் முதன்முதலாக மாவட்ட ஆட்சியர் உயர்.திரு.சிவனருள்.IAS. அவர்கள்  மக்கள் குறைதீர்ப்பு நாளான நேற்று காலை 10 மணி முதல் மக்களை அலுவலகத்தில் நேரில் வரவழைத்து  அவர்களது  குறைகளை கேட்டு மனுக்களை பெற்றுக்கொண்டார்.  மனுக்களை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் உடனே நடவடிக்கை   எடுக்க அனுமதித்தார்.  குறைதீர்ப்பு நேர்முக  நாளன்று  திரு.வில்சன் ராஜசேகர்.DRO, திரு.தங்கையா மற்றும் அனைத்து துறை  அதிகாரிகளும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறை உங்கள் நண்பன் உதவிகரம் காட்டிய டி.எஸ்.பி

பெருந்துறை துணைக் காவல் கண்காணிப்பாளராக  ராஜ்குமார்.அவர் கொடுமுடி காவல் நிலைய ஆய்வுக்காக நேற்று 29.11.2019 வெள்ளிக்கிழமையன்று  சென்றுவிட்டு திரும்பி வரும் போது வழியில் வாகன விபத்தில் அடிபட்ட கொடுமுடியைச் சேர்ந்த  இரத்தக் காயங்களுடன் நடக்க முடியாத நிலையில் இருந்த பெண்ணின் உதவிக்காக  அவருடைய  காவல்வாகனத்தில் ஏற்றும்பொழுதுஅவ்வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் வந்துள்ளது.   உடனடியாக  108  அவசர உதவி வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் நெடுஞ்சாலைத்துறைக்கு தகவல் தெரிவித்து வேகத்தடை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார்.காவல்துறை உங்களின் நண்பன்தான் என்பதை அவரது இந்த  செயல் மூலம் மெய்பித்து காட்டியுள்ளார். மேலும் பொதுமக்களின் ஏகபோக  பாராட்டையும் பெற்றுள்ளார்.

ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் சார்பாக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் வாரவிழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ஈரோடு ஸ்பைஸ்  ரவுண்ட் டேபிள் சார்பாக மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இதுதொடர்பாக ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் 211 அமைப்பின் தலைவர் தர்மராஜ், செயலாளர் சக்திகணேஷ், பொருளாளர் சிவகுமார் ஆகியோர் தெரிவித்துள்ளதாவது, ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பு 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட இளம் வயதினரை கொண்ட சமூக சேவையை மட்டும் குறிக்கோளாக கொண்ட அமைப்பாகும்.  இந்த அமைப்பின் சார்பில் இந்தியா முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் 2 ஆயிரத்து 849 பள்ளிகளில் 282 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 ஆயிரத்து 625 வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.  இதன் மூலமாக 72.80 லட்சம் குழந்தைகள் பயன் பெற்றுள்ளனர். மேலும் 3 லட்சம் குழந்தைகளுக்கு…

உடுமலை அருகே காலி மதுபாட்டில் குடோனால் விவசாயிகள் வேதனை

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த ஜிலேபி நாயக்கன் பாளையத்தில் முறைகேடாக மதுபாட்டில்களை எடுத்து வந்து. ரசாயன பொருட்களை பயன்படுத்தி அதன் கழிவுகளை பூமிக்கடியில் விடுவதால்  அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள் பாழாகி  வருவதாக விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர். மேலும், கம்பெனியில் எங்கிருந்து மது பாட்டில்கள் எடுத்து வரப்படுகிறது என்பது தெரியவில்லை. தவிர,  சுத்தம் செய்யப்படாமல் மதுபாட்டில்களை எடுத்துவந்து எந்த உரிமமும் இல்லாமலும் நிறுவனத்தின் பெயர் பலகை இல்லாமலும் பெண்கள் பலரை பணியில் அமர்த்தி மதுபாட்டில்களை சுத்தம் செய்து கழிவுகளை பூமிக்கடியில் விடுவதால் விளைநிலங்கள் சேதம் அடைவதோடு மட்டுமில்லாமல் முகம் சுளிக்க கூடிய அளவில் துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு விளை நிலங்கள் பாழாகும் அபாயத்தை தடுக்கும் வகையில, மாவட்ட நிர்வாகம், மது பாட்டில்களை கழுவும் கம்பெனி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்…

குடியிருப்புக்களுக்குள் வெள்ள நீா் புகுந்தது

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மில்மேடு பகுதியில் கீழ்பவானி பிரதான கால்வாயில்  உடைப்பு ஏற்பட்டதில் கேத்தம்பாளைம் சின்னபீளமேடு ஆகிய இரு கிராமங்களில் குடியிருப்புக்களுக்குள் வெள்ள நீா் புகுந்ததில் பாதிக்கப்பட்ட 128 குடும்பங்களுக்கு தலா பத்து கிலோ அரிசி வேட்டி சேலை மற்றும் ரூ.6200 நிவாரனத்தொகை அரசு சார்பிலும் அதிமுக கழகத்தின் சார்பில் தலா ரூ.5 ஆயிரம் என மொத்தமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.11200  ஆகியவற்றை மாண்புமிகு  பள்ளிக்கல்வி, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை  அமைச்சா் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் மற்றும் மாண்புமிகு  சுற்றுச்சூழல்துறை அமைச்சா் திரு.கே.சி.கருப்பணன் அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள். முன்னதாக வெள்ள நீா் புகுந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை மாண்புமிகு  அமைச்சா்கள் பெருமக்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்….

மதுரை பெரியார் பேருந்து நிலைய பணிகள். விரைந்து முடிக்க அதிகாரிகள் ஆலோசனை.

மதுரை பெரியார் பேருந்து நிலையம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நவீனமாக மாற்றப்பட உள்ள பணிகள் தீவிரம். விரைந்து முடிக்க அதிகாரிகள் ஆலோசனை. மதுரை பெரியார் பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இதற்கான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 159.7 கோடி ரூபாயை மதுரை மாநகராட்சி நிதி ஒதுக்கியது. இதற்கான தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களால் கடந்த ஆறு மாதம் முன்பே அடிக்கல் நாட்டப்பட்டது. பணிக்காக காம்ப்ளக்ஸ்களும், பஸ் ஸ்டாண்டும் இடிக்கப்பட்டு ஒப்பந்தக்காரர்கள் P&C. புரொடக்க்ஷன்ஸ் சார்பில் புதிய பேருந்து நிறுத்தம் பணி துவங்கி நடைபெற்று வரும் நிலையில் 7 தளங்கள் அமைக்கும் பணியினை மாநகராட்சி பொறியாளர் சேகர், உதவிப் பொறியாளர் சேவியர், தியாகு ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். தற்போது இரு தரை கீழ் தளங்கள் அமைப்பதற்கான ராட்ச்சச பள்ளம் தோண்டும்…

சுர்ஜித்துக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர்கள்

திருச்சி மணப்பாறை, நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சுர்ஜித் என்ற 2 வயது சிறுவனுக்கு மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். உடன் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் பா.ஆறுமுகம் மற்றும் பலர் உள்ளனர்.