சைக்கிள் திருடிய சிறுவனுக்கு போலிசார் சைக்கிள் பரிசு அளித்துள்ளனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே ஒரு வீட்டில் சைக்கிள் திருட்டு போனதாக வீட்டின் உரிமையாளர்கள் போலிசிடம் புகார் அளித்தனர். போலிஸ் நிலைய ஆய்வாளர் வினோத் கிருஷ்ணன் இதன் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தி திருடனைக் கண்டுபிடித்தார். ஆனால் திருடியது எட்டு வயது சிறுவன் என்பதை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்தார். அங்குள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் சிறுவன், சைக்கிள் ஓட்டும் ஆசையால் பக்கத்து வீட்டில் இருந்து சைக்கிளை திருடியதாக ஒப்புக் கொண்டான். சைக்கிளை கைப்பற்றி உரிமையாளரிடம் போலிசார் ஒப்படைத்தனர். சிறுவனையும் அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பினர். பின்னர் புது சைக்கிள் ஒன்றுடன் போலிசார் சிறுவன் வீட்டுக்குச் சென்று பரிசாக அளித்தனர். இதனை பெற்றுக் கொண்ட சிறுவன் ‘இனிமேல் திருடமாட்டேன்’ என்று உறுதியளித்தான்.

2015 ஆம் ஆண்டில் சிறந்த நிருபருக்கான அன்னை தெரசா விருது

2015 ஆம் ஆண்டில் சிறந்த நிருபருக்கான அன்னை தெரசா விருது 2015 ஆம் ஆண்டில் உள்ளாட்சி முரசு பத்திரிக்கை சார்பாக சிறந்த நிருபருக்கான அன்னை தெரசா விருது உடுமலை D.மணியன் அவர்களுக்கு கோவை ஜென்னி கிளப்பில் உள்ளாட்சி முரசு ஆசிரியர் ரிச்சார்டு ஆனந்த் அவர்கள் கவுண்டன்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ.ஆறுக்குட்டி அவர்களால் மக்கள் மித்திரன் ஆசிரியர் D.மணியன் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

வேலை வாய்ப்பு

சென்னை உயர்நீதி மன்றத்தில்  அலுவலக பணியிடங்களுக்கான பணி அறிவிப்பு. கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், தட்டச்சர், ஜெராக்ஸ் ஆப்ரேட்டர்,உதவியாளர் பணி போன்றவற்றிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள், கணினி பயிற்சி சான்றிதழ்,தட்டச்சு சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இந்த பணிகளுக்கான வயது வரம்பு 1-7-2019 தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.   தகுதியும் விருப்பம் உள்ளவர்கள் இணைய தள மூலமாக விண்ணப்பிக்கலாம்.விண்ணபத்திற்கான காலம் இந்த மாதம் இறுதிக்குள் விண்ணப்பிக்க படவேண்டும்.மேலும் இந்த பணிகளுக்கான விவரங்களை தெரிந்து கொள்ள www.mhc.tn.gov.in இணையதள பக்கத்தில் பார்க்கவும்.