கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முக்கிய ஆலோசணை

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து, முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில், இன்று அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். ஊரடங்கு விதிமுறைகளை கடுமையாக்குவது.  பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்துவது.  தடுப்பூசி கொள்முதலை அதிகமாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. பரவல் அதிகமானால், ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் நேர ஊரடங்கு அறிவிப்பது குறித்தும், ஆலோசனையில் முடிவு எடுக்கப்படலாம் என தெரிகிறது.

ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக ரஜினிகாந்த் அறிவிப்பு

ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக ரஜினிகாந்த் அறிவிப்பு வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.இது தொடர்பான அறிவிப்பு டிசம்பர் 31-ம் தேதி வெளியாகும் ரஜினிகாந்த் அறிவிப்பில் வரும் சட்டமன்ற தேர்தலில், 2021 –ல் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் நேர்மையான, ஊழலற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம் மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல   அற்புதம்.. அதிசயம்.. நிகழும் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இராமநாதபுரம் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

இராமநாதபுரம் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர் புரெவி புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்பதால் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல்  இரவு இலங்கையில் கரையைக் கடந்து டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை குமரி – பாம்பன் இடையே கரையைக் கடக்க உள்ளது. இதனால் தென் தமிழக மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ரஜ் ஆலிவர் வெளியிட்ட செய்தியில், புரெவி புயல் கரையைக் கடக்க உள்ளதால் ராமநாதபுரம் மக்கள் டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண…