கிரிக்கெட்டில் கால்பதித்தார் சேலம் நடராஜன்

கிரிக்கெட்டில் கால்பதித்தார் சேலம் நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் அறிமுக வீரராக களம் இறங்கினார். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த 29 வயதான நடராஜன், தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட்டின் மூலம் பிரபலம் ஆனார். அதில் அவரது பந்து வீச்சை கண்டு வியந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு அவரை ஏலத்தில் எடுத்தது. அப்போது அவர் ஜொலிக்கவில்லை. இந்த ஐ.பி.எல். சீசனில்  சன்ரைசர்ஸ் அணிக்காக களம் கண்டு பிரமாதப்படுத்தினார். 16 ஆட்டங்களில் 16 விக்கெட் கைப்பற்றியதோடு, மொத்தம் 71 யார்க்கர் பந்துகளை வீசி கவனத்தை ஈர்த்தார். அதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் வலை பயிற்சி பவுலராக தேர்வு செய்யப்பட்டார். பிறகு சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி காயத்தால் விலகியதால்…

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி பேட்டிங்

லண்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. டாஸை வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃபராஸ் அகமத் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 

அரைஇறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய அணி – வங்காளதேசத்துடன் இன்று மோதல்

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் பர்மிங்காமில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது. இந்திய அணி 7 ஆட்டத்தில் ஆடி 5 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 11 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. இந்த போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காமல் இருந்த இந்திய அணி இதே ஆடுகளத்தில் (பர்மிங்காம்) நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் வீழ்ந்து முதல் தோல்வி கண்டது. அந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா சதம் அடித்தார். விராட்கோலி அரை சதத்தை கடந்தார். இருவரும் நல்ல பார்மில் நீடிக்கின்றனர். லோகேஷ் ராகுல் ஏமாற்றம் அளித்தார். டோனி, கேதர் ஜாதவ் அதிரடியாக ஆட முடியாமல் அதிர்ச்சி அளித்தனர். சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர…